அழகிய தமிழில் எழுதுங்கள் - ஆலந்தூர் கோ.மோகனரங்கன் பாடல்

 


படிக்கும் காலம் பொற்காலம் - கட்டுரை முடிவில் சேர்க்க வேண்டியது.


   இந்த நூலிற்கான தலைப்பாக அமைந்த 'படிக்கும் காலம் பொற்காலம்' என்ற பாடலை எங்கள் இளமனூர் பள்ளியின் மாணவர்கள் அனைவரும் இசையோடு பாடுவார்கள். வாசிக்கும் உங்களுக்கும் இப்பாடலைப் பாடவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? இதோ அந்தப்பாடல்...


அழகிய தமிழில் எழுதுங்கள்!

அனைவரும் மகிழ்ந்து பழகுங்கள்!

பிழைகளை ஒலிக்க வாருங்கள்!

பிள்ளைகள் விரைந்து சேருங்கள்!


முயற்சிகள் செய்தால் முடியாதா?

முற்றிலும் நெஞ்சில் படியாதா? 

பயிற்சிகள் என்றும் வெற்றிபெறும்

பைந்தமிழ் நாவில் பற்றிவரும்!


படிக்கும் காலம் பொற்காலம்!

பண்பை வளர்க்கும் நற்காலம்!

படித்தோர் பாரில் உயர்ந்தார்கள்!

படிக்க வாரீர் தோழர்களே!


ஆகா! நீங்களும் அருமையாகப் பாடுகிறீர்கள். உங்களுக்கும் எனது வாழ்த்துகள். உங்கள் நண்பர்களுக்கும் இப்பாடலை அனுப்புங்கள். அவர்களும் பாடட்டும். படிக்கும் காலம் பொற்காலமாகட்டும்.




   புதிய கல்வியாண்டான இவ்வாண்டில் 22-06-2026 அன்று எங்கள் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா நடத்தினோம். அவ்விழாவில் எனது தமிழாசான் கவிஞர். அ.கணேசன் அவர்களின் திருஉருவப் படத்தினை எங்களது பேரிலோவன் பட்டி பள்ளியில் பயின்று, தலைமையாசிரியராகப் பணிபுரிந்து, பணி நிறைவு பெற்ற ஐயா திரு.ஆ.கோவிந்தராமானுஜம் அவர்களும், பணி நிறைவு பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் திரு.கி.இராசேந்திரன் அவர்களும், துணைத்தலைவர்  ம.சா.ஆரோக்கியராஜன் அவர்களும் திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார்கள்.

Post a Comment

0 Comments