ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
நயம் பாராட்டுக
விரிகின்ற நெடுவானில், கடற்ப ரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில், புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகுஎன்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும்நீ குடியிருக்க வேண்டு வேனே!
- ம.இலெ. தங்கப்பா
திரண்ட கருத்து : விரிந்த வானம், அகன்ற கடல், ஓங்கி உயர்ந்த மலை, பள்ளத்தாக்கு, அருவி, குளம், புல்வெளி, வயல், விலங்குகள், பறவைகள் போன்ற எல்லாப் பொருள்களிலும் இயற்கையாகிய இனிய சுவை, தூய்மை, அழகு என்னும் பேரொழுக்கம் காணப்படுகிறது. அதுபோல மக்கள் உள்ளத்திலும் அவை குடியிருக்க வேண்டும்.
மையக்கருத்து : இயற்கைக் காட்சிகளில் அழகு குடிகொண்டிருப்பதுபோல, மக்கள் அகக்காட்சியிலும் நேர்மையும் ஒழுங்கும் குடியிருக்க வேண்டுமென்கிறார் ஆசிரியர்.
மோனை : அடிதோறும் முதல் சீரில் முதல் எழுத்து ஒன்றிவருவது மோனைத்தொடையாகும்.
விரிகின்ற - விண்ணோங்கு, தெரிகின்ற - தெவிட்டாத, அழகு - அகத்திலும்
எதுகை : இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகைத்தொடையாகும். விரிகின்ற - தெரிகின்ற
அணிநயம் : இப்பாடலில் செய்திகள் இயல்பாகக் கூறப்பட்டிருப்பதால், இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது. எளிய, இனிய சொற்களில் இயற்கை அழகு வருணித்து உரைக்கப்பட்டுள்ளது.
3 Comments
KD
ReplyDeleteOk
DeleteKonar nayam paratuga send me
ReplyDelete