9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 , தொடர் இலக்கணம் - இயங்கலைத் தேர்வு - வினா & விடை / 9th TAMIL - EYAL 1 - THODAR ILAKKANAM - ONLINE TEST - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் 1 - கற்கண்டு - தொடர் இலக்கணம் 

 நிகழ்நிலை சான்றிதழ்த் தேர்வு - 3

வினா உருவாக்கம் 

 புலவர்.ரெ.துவாரகன் , தமிழாசிரியர் ,

 காட்டூர் பாப்பாக்குறிச்சி , திருச்சி.


பசுமைக்கவிஞர். மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர்,  மதுரை - 97861 41410

        தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் தினம் ஒரு சான்றிதழ்த்தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற எண்ணிற்கு வாட்சாப்பில் அனுப்பி ஆன்லைன் தேர்வு இணைப்பினைப் பெறலாம்.

******************   *********   **************

1) ஒரு சொற்றொடரில் அமையும்   வினைச்சொல் ------ ஆகும்.

அ) பயனிலை

ஆ) பெயர்

இ) பண்பு

ஈ) ஏதுமில்லை

விடை : அ ) பயனிலை

2) செய்பவரை முதன்மைப் படுத்தும் வினை ------

அ) உடன்பாட்டுவினை

ஆ) பிறவினை

இ) தன்வினை

ஈ ) செய்வினை

விடை : ஈ ) செய்வினை 

3) செயப்படுபொருளை முதன்மைப் படுத்தும் வினை -----

அ) தன்வினை

ஆ) செய்வினை

இ) செயப்பாட்டுவினை

ஈ) பிறவினை

விடை : இ ) செயப்பாட்டு வினை 

4) படித்த மாணவன் - இலக்கணக் குறிப்பு

அ) பெயரெச்சம்

ஆ) வினையெச்சம்

இ) வியங்கோள் வினைமுற்று

ஈ) பண்புத்தொகை

விடை : அ ) பெயரெச்சம்

5 ) கீழ்க்கண்டவற்றுள் எது
வினையாலணையும் பெயர்?

அ) அணையா விளக்கு

ஆ) படித்த மாணவன்

இ) வாழ்க வாழ்க

ஈ) அனுப்புநர்

விடை : ஈ ) அனுப்புநர்


6) சொன்னவள் கலா - இது  ------- பயனிலை ஆகும்.

அ) வினைப்பயனிலை

ஆ) பெயர்ப்பயனிலை

இ) வினாப்பயனிலை

ஈ.) வேற்றுமைத்தொகை

விடை : ஆ ) பெயர்ப்பயனிலை

7) ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடம் ------  ஆகும்.

அ) எழுவாய்

ஆ) செயப்படுபொருள்

இ) பயனிலை

ஈ ) உவம உருபு

விடை : இ ) பயனிலை

8 ) ஒரு தொடரில் ------  இருக்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லை.

அ) செயப்படுபொருள்

ஆ) எழுவாய்

இ) பயனிலை

ஈ ) வினை

விடை : அ ) செயப்படுபொருள்

9) பந்து உருண்டது என்பது ----- வினை

அ ) செய்வினை

ஆ ) செயப்பாட்டு வினை

இ) தன்வினை

ஈ ) பிறவினை

விடை : இ ) தன்வினை 

10) நல்ல நூல் ஒன்று படித்தேன்
இத்தொடரில் நல்ல என்னும் சொல் -----

அ) வினையடை

ஆ) பெயரடை

இ) ஆகுபெயர்

ஈ) உரிச்சொல்

விடை : ஆ ) பெயரடை 

11) மகிழ்நன் மெல்ல வந்தான் - இத்தொடரில் மெல்ல என்னும் சொல் ------

அ) பெயரடை

ஆ) வினையடை

இ) அடுக்குத்தொடர்

ஈ) பெயரெச்சம்

விடை : ஆ ) வினையடை

12) ' படு' என்னும் துணைவினைச்சொல்
------- தொடரில் சேர்ந்துவரும்.

அ) தன்வினை

ஆ) பிறவினை

இ) செய்வினை

 ஈ) செயப்பாட்டுவினை

விடை : ஈ ) செயப்பாட்டு வினை

13) பதம் ----- வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ )ஐந்து

விடை : அ ) இரண்டு 

14) பகுபத உறுப்புகள் ----- வகைப்படும்.

அ) 4

ஆ) 6

இ) 8

ஈ) 10

விடை : ஆ ) 6

15) பகுதி என்பதன் மற்றொரு பெயர் -----

அ) இடைநிலை

ஆ) இறுதிநிலை

இ) முதனிலை

ஈ) பயனிலை

விடை : இ ) முதனிலை

16) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும் உறுப்பு ------

அ) இடைநிலை

ஆ) சந்தி

இ) சாரியை

ஈ) எழுத்துப்பேறு

விடை :  அ) இடைநிலை

17) சொல்லின் இறுதியில் நின்று திணை, பால் , எண் , இடம் காட்டுவது ----- ஆகும்.

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடைநிலை

ஈ) சந்தி

விடை : ஆ ) விகுதி

18 ) தமிழமுதன் நேற்று வந்தான் ------
தொடர்.

அ) தன்வினை

ஆ) பிறவினை

இ) செய்வினை

ஈ) செயப்பாட்டுவினை

விடை : அ ) தன்வினை

19 ) பூக்களைப் பறிக்காதீர் -----  தொடர்.

அ) உணர்ச்சித்தொடர்

ஆ) வினாத்தொடர்

இ) கட்டளைத்தொடர்

ஈ) தன்வினைத்தொடர்

விடை : இ ) கட்டளைத்தொடர்

20) பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து ------ ஆகும்.

அ) சந்தி

ஆ) சாரியை

இ )  விகாரம்

ஈ ) எழுத்துப்பேறு

விடை : ஈ ) எழுத்துப்பேறு

***************   **************  **************

Post a Comment

3 Comments