எட்டாம் வகுப்பு - தமிழ்
இயல் - 1 , கட்டுரை
நான் விரும்பும் கவிஞர்
பாவேந்தர் பாரதிதாசன்
குறிப்புச் சட்டம்
* முன்னுரை
* பிறப்பும் இளமையும்
* மொழிப்பற்று
* நாட்டுப்பற்று
* தொழில் வளம்
* முடிவுரை
முன்னுரை:
தமிழ்மொழியையும், தமிழ்நாட்டையும் தம் இருகண்களாகக் கருதி உழைத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே நான் விரும்பும் கவிஞர் ஆவார். தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் தொண்டு செய்வதே தனது தொண்டாகக் கொண்ட புரட்சிக் கவிஞரானார்.
பிறப்பும் இளமையும் :
பாரதிதாசன் புதுச்சேரியில் கனகசபை - இலக்குமி இணையருக்கு 29.4.1891 அன்று பிறந்தார். பாரதியின் மேல் கொண்ட பற்றால் தம்பெயரைப் பாரதிதாசன் (சுப்புரத்தினம்) என
மாற்றிக்கொண்டார். குடும்பவிளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.
மொழிப்பற்று :
"தமிழுக்கு அழுதென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" எனத் தமிழைத் தம் உயிராகக் கருதி ஆழ்ந்த பற்றும் புலமையும் கொண்டார். தமிழ் மொழியின் இனிமையைச் சுவைத்த அவர் தமிழை அமுது எனக் கூறுகிறார். மண்ணும் விண்ணும் தோன்றிய மூத்த மொழி எனத் தமிழ்மொழியின்
தொன்மையை உலகறியப் பேசுகிறார்.
நாட்டுப்பற்று :
மொழிப்பற்றோடு நாட்டுப் பற்றும் மிக்க அவர். தமிழகத்தில் நிலவிய சாதி, மூடநம்பிக்கை, பெண்ணடிமை. உழைப்பவர்களின் துயரம் ஆகியவற்றைத் தம் கவிதைகளால் சாடியதோடு மட்டுமன்று அவற்றை நீக்கவும் அரும்பாடுபட்டார்.
தொழில் வளம் :
நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும். தொழிலாளர் நிலை உயரவேண்டும். எனவே "புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்று தம் கவிதையால் புது உலகைப் படைக்க விரும்பினார்.
முடிவுரை:
தம் கவிதைத்திறத்தால் நாட்டுமக்களின் இதயத்தே நல்லறிவுமூட்டிமானமுள்ள தமிழர்களாக மக்கள் வாழ்ந்திடச் செய்தவர். சாதியாலும் மதத்தாலும் பிரிந்த மக்களை ஒன்றுபடுத்தி ஓரினமாக வாழவைத்த கவிஞரே நான் விரும்பும் பாரதிதாசன் ஆவார்.
15 Comments
Raja and
ReplyDeleteExalent
ReplyDeleteThank you 😀
ReplyDeleteWaste
ReplyDeletePerfect 👍
ReplyDeleteOne spelling mistake is done
ReplyDeleteMother fker
ReplyDeleteUseful to 8th class students thankyou for your help
ReplyDeleteExcellent
ReplyDeleteThank you For you terrible asshole shitty motherfucket katturai my mom made me write this for 3 hrs YALL ARE STUPIDS MOTHER FUCKERS
ReplyDeleteIt’s isn’t even that long-
DeleteThank you
ReplyDeleteThank you 👍
ReplyDeleteThanks 👍
ReplyDeleteUseful
ReplyDelete