10 ஆம் வகுப்பு - தமிழ் - பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி / 10 TAMIL - PAADALAIP PADITHTHU VIDAIYALI - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

இயல் 1 (வினா எண் 12 முதல் 15 வரை)

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

1. தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

1.இச்செய்யுள் இடம்பெற்ற நூல் எது?

அ. உலகியல் நூறு ஆ. பாவியக்கொத்து

 இ.நூறாசிரியம் ஈ. கனிச்சாறு

விடை : ஈ) கனிச்சாறு

2. 'மன்னுஞ் சிலம்பே - இத்தொடரில் வரும் இலக்கியம் ------

விடை : சிலப்பதிகாரம்

3.தென்னன் என்ற சொல்லின் பொருள்---

விடை : பாண்டிய மன்னன்

4.செந்தமிழின் வடிவம் எது என்று ஆசிரியர் கூறுகிறார்?

விடை : மணிமேகலை.

                           இயல் 4

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

1. இந்நூலின் ஆசிரியர்

அ. கீரந்தையார் ஆ. குலசேகராழ்வார் 

இ. பாரதியார்        ஈ . பெருஞ்சித்திரனார்

விடை : ஆ ) குலசேகராழ்வார்

2. இப்பாடல் வழி அறியவரும் சிகிச்சை முறை---------

விடை : அறுவைச்சிகிச்சை

3.இச்செய்யுளில் இறைவன் எவ்வாறு உருவகப்படுத்தப்படுகிறார்?

விடை : அன்னையாக

4. "மாயம்” என்பதன் பொருள் ------

விடை : விளையாட்டு

                            இயல் 5

3.அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.


1. இச்செய்யுளை இயற்றியவர்-----

விடை : செய்குதம்பிப் பாவலர்

2. பிரித்து எழுதுக - அருந்துணை 

விடை : அருமை + துணை

3. செய்யுளில் மதி என்ற சொல்லின் பொருள்-------

விடை : அறிவு 

4. இச்செய்யுளின் மையப்பொருள் -----

விடை : கல்வி

                              இயல் 6

4 ) வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்
திண்மையில்லை நேர்செறுந ரின்மையால்
உண்மையில்லை பொய்யுரை யிலாமையால் 
வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்


1. இச்செய்யுள் இடம்பெற்ற நூல் ------

விடை : கம்பராமாயணம்

2. வண்மை என்ற சொல்லின் பொருள் ----

விடை : கொடை

3. பொய்யுரை - பிரித்தெழுதுக

விடை : பொய் + உரை

4. கோசலநாட்டில் அறியாமை இல்லை. ஏன்?

விடை : கேள்விச்செல்வம் மிகுதலால்.


                               இயல் 7

5 ) "பகர்வனர் திரிதரு நகரவீதியும்;
பட்டினும் ம.பிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"

1. இச்செய்யுள் இடம்பெற்ற நூல் --------

விடை : சிலப்பதிகாரம்

2 பாடலில் அமைந்த எதுகை,மோனையை எடுத்து எழுதுக.

விடை :  எதுகை - பட்டினும் - கட்டு

                 மோனை - கர்வனர் - ட்டினும்

3. காருகர் - பொருள் தருக.

விடை : நெசவாளர்

4. இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

விடை : அகில் , சந்தனம்

                                 இயல் 8

6 ) கவிஞன் பானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிரு பொருளென் செல்வம் 

1. பாடலின் ஆசிரியர் யார்?

விடை : கண்ணதாசன்

2. கவிஞன், கருப்படு சொற்களில் வரும் நயம்  --------

விடை : மோனை

3 . புவி என்ற சொல்லின் பொருள் ----------

விடை : பூமி 

4 . பிரித்து எழுதுக - நானோர் 

விடை : நான் + ஓர்

                        இயல்  - 9 

7 ) பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்
யாக்கையைப் பிணித்தென்று ஆக
இனிதிலுள் அடக்கி வாய்ந்த
ஆக்கையை அடக்கிப் பூவோடு
அழுங்கணீர் பொழிந்தான் மீதே

1. இச்செய்யுள் இடம்பெற்ற நூல்------

விடை : தேம்பாவணி

2. யாக்கை என்ற சொல்லின் பொருள் -----

விடை : உடல்

3. பூக்கையை, சேக்கையை - என்ற சொற்களல் இடம்பெறும் நயம்------

விடை : அடி எதுகை


4. பிரித்து எழுதுக - பிணித்தென்று

விடை : பிணித்து + என்று

*******************   *************   ***************

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   ********




Post a Comment

0 Comments