11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழியை ஆள்வோம் - தமிழாக்கம் தருக / பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க - 11 TAMIL EYAL 1 - MOZHIYAI AALVOM

 

வகுப்பு - 11 , தமிழ் 

இயல் - 1 , மொழியை ஆள்வோம் 

தமிழாக்கம் & பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் 



***********   **************     ************

தமிழாக்கம் தருக

1.) The Pen is mightier than the Sword.

விடை: கத்தி முனையைவிட பேனாமுனை கூர்மையானது.

2 ) Winners don't do different things, they do things differently.

விடை: வெற்றியாளர்கள் மாறுபட்ட செயலைச் செய்யாமல், செய்வதையே வித்தியாசமாக செய்ய முயற்சிப்பார்கள்.

3 ) A picture is worth a thousand words.

விடை: ஓர் ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்.

4 ) Work while you work and play while you play.

விடை:

வேலை செய்யும்போது வேலையில் கவனம் வை! விளையாடும்போது விளையாட்டில் கவனம் வை

5 ) Knowledge rules the world.

விடை: அறிவே உலகை ஆள்கிறது.


பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க

பிறமொழிச் சொல்     தமிழ்ச்சொல் 

வாடகை         -    குடிக்கூலி
நிச்சயம்         -     உறுதி
சம்பளம்          -   ஊதியம்
தேசம்               -  நாடு
விசா                -   நுழைவிசைவு, நுழைவாணை பத்திரிகை      -   செய்தித்தாள்
ராச்சியம்          -   ஆட்சி
சொந்தம்       -    உரியது (தனக்குரியது)
மாதம்                 -   திங்கள்
உத்திரவாதம்      -   பொறுப்பு, பினை
ஞாபகம்                  -   நினைவு
வித்தியாசம்        -   வேறுபாடு
பாஸ்போர்ட்         -   கடவுச்சீட்டு
கோரிக்கை           -   வேண்டுகோள்
சரித்திரம்               -   வரலாறு
சமீபம்                      -   அண்மை
போலீஸ்                  -   காவலர்
சந்தோஷம்             -    மகிழ்ச்சி
வருடம்                     -   ஆண்டு
உற்சாகம்                -   மன எழுச்சி, ஊக்கம்
கம்பெனி                 -   குழுமம்
யுகம்                          -  காலத்தை அளக்கும்
                                       அலகுகளில் ஒன்று
முக்கியத்துவம்      -    இன்றியமையாமை
தருணம்                     -   தக்க சமயம்

**************     **************    **********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

1 Comments