ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 3 , உள்ளத்தின் சீர்
மொழியை ஆள்வோம்
பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A Nation's culture resides in the hearts and in the soul of its people. - Mahatma Gandhi
ஒரு நாட்டின் பண்பாடு, மக்கள் மனத்திலும் ஆன்மாவிலும் குடிகொண்டிருக்கும். - மகாத்மா காந்தி
2. The art of people is a true mirror to their minds. - Jawaharlal Nehru.
மக்களது கலை என்பது; அவர்களின் உண்மையான மனங்களாகிய கண்ணாடிகளில் பிரதிபலிக்கின்றது. - ஜவஹர்லால் நேரு.
3. The biggest problem is the lack of love and charity. - Mother Teresa.
அன்பும் கருணையும் சுருங்கிப் போனதே, மிகப் பெரிய பிரச்சனையாகும். - அன்னை தெரேசா.
4. You have to dream before your dreams can come true. - A.P.J Abdul Kalam.
உங்கள் கனவுகள் நனவாகுமுன், நீங்கள் ஓர் உன்னதக் கனவு காணவேண்டும்.- ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
5. Winners don't do different things; they do things differently. - Shiv Khera.
வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான செயல் எதையும் செய்வதில்லை. ஆனால், செய்வதை வித்தியாசமாகச் செய்கிறார்கள். - சிவ்கிரா.
**************** *************** ********
வடிவம் மாற்றுக
பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.
1 ) உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2 ) டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப் படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை, அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
3 ) இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன், நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும், பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.
விடை :
தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன், நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும், பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை, அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
***************** *********** ************
மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
எ - கா : ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.
1. மேடும் பள்ளமும் : நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது, மேடும் பள்ளமும் கொண்டதாக இருக்கிறது.
2. நகமும் தசையும் : நல்ல நண்பர்கள் நகமும் தசையும்போல் இணைபிரியாது இருப்பர்.
3. முதலும் முடிவும் : செய்த தவறுக்கு வருந்தி, முதலும் முடிவுமாக மன்னிப்புக் கோரினார்.
4. கேளிக்கையும் வேடிக்கையும் : திருவிழாவில், கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்து காணப்படும்.
5 . கண்ணும் கருத்தும் : தாய், தன் குழந்தையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தாள்.
0 Comments