9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , வீட்டிற்கோர் புத்தகசாலை - வினா & விடை / 9th TAMIL EYAL 5 - VEETTIRKOR PUTHTHAKASAALAI - ONLINE TEST

 


9 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் 5 , வீட்டிற்கோர் புத்தகசாலை 

இயங்கலைத்தேர்வு 

போட்டித்தேர்வில் வெற்றி !

வினா உருவாக்கம் 

 ' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை - 97861 41410


வினாக்களும் விடைகளும்

1 ) ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது ----- நூலகம் ஆகும்.

அ) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

ஆ) கன்னிமாரா நூலகம்

இ) திருவனந்தபுரம் நூலகம்

ஈ) அண்ணா நூற்றாண்டு நினைவு   நூலகம்

விடை : அ ) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

2 ) உலகளவில் தமிழ் நூல்கள்   அதிகமுள்ள நூலகம்

அ ) அண்ணா நூற்றாண்டு நினைவு   நூலகம்

ஆ) கன்னிமாரா நூலகம்

இ) மதுரை மாவட்ட மைய நூலகம்

ஈ) கோவை மத்திய நூலகம்

விடை : ஆ ) கன்னிமாரா நூலகம்

3) இந்தியாவில் தொடங்கப்பட்ட  முதல் பொது நூலகம் -----

அ) கொல்கத்தா நடுவண் நூலகம்

ஆ) திருவனந்த புரம் நடுவண்
நூலகம்

இ) மும்பை நடுவண் நூலகம்

ஈ) டில்லி நடுவண் நூலகம்

விடை : ஆ ) திருவனந்த புரம் நடுவண்
நூலகம்

4 ) இந்தியாவின் மிகப்பெரிய
நூலகம்  -------  ல் உள்ளது.

அ ) இராஜஸ்தானில்

ஆ) பாட்னாவில்

இ) சென்னையில்

ஈ) கொல்கத்தாவில்

விடை : ஈ )  கொல்கத்தாவில்

5 ) உலகின் மிகப்பெரிய நூலகம் 
---- நாட்டிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்' ஆகும்.

அ ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) இரஷ்யா

விடை : இ ) அமெரிக்கா

6)' தென்னகத்துப் பெர்னாட்ஷா ' என்று அழைக்கப் படுபவர் யார் ?

அ) புதுமைப்பித்தன்

ஆ) ஜெயகாந்தன்

இ) பாரதியார்

ஈ) அண்ணா

விடை : ஈ ) அண்ணா

7 ) சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று மாற்றியவர் யார்?

அ) அறிஞர் அண்ணா

ஆ) கர்மவீரர் காமராசர்

O இ) மூதறிஞர் இராஜாஜி

ஈ) கலைஞர்.மு.கருணாநிதி

விடை : அ ) அறிஞர் அண்ணா

8) "நான் இன்னும் வாசிக்காத
நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி
வந்து என்னைச் சந்திப்பவனே
என் தலை சிறந்த நண்பன்"
என்று கூறியவர் யார் ?

அ) லியோ டால்ஸ்டாய்

ஆ) அண்ணல் அம்பேத்கர்

இ) ஆபிரகாம் லிங்கன்

ஈ) வின்ஸ்டன் சர்ச்சில்

விடை : இ ) இ) ஆபிரகாம் லிங்கன்

9 ) இசையைப் போன்றே இதயத்தைப் பண்படுத்துவன ------

அ) நூல்கள்

ஆ) விளையாட்டுகள்

இ) நண்பர்கள்

ஈ) பணம்

விடை : அ ) நூல்கள்

10 ) ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின்----- வளத்தைக்கண்டே
என்கிறார் அறிஞர் அண்ணா.

அ) மனவளம்

ஆ) இயற்கை வளம்

இ) கனிம வளம்

ஈ) எண்ணெய் வளம்

விடை : அ ) மனவளம்

11 ) தமிழக அரசு அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தை ------ ஆம்
ஆண்டில் உருவாக்கியது.

அ ) 2000

ஆ) 2005

இ ) 2008

ஈ ) 2010

விடை : ஈ ) 2010

12 ) நமது தமிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்தகும் இலக்கியம் ------

அ) பக்தி இலக்கியம்

ஆ) சங்க இலக்கியம்

இ) நவீன இலக்கியம்

ஈ) மொழி பெயர்ப்பு இலக்கியம்

விடை : ஆ ) சங்க இலக்கியம்

13 ) உலகில் சாகாவரம் பெற்ற   பொருள்கள் புத்தகங்களே
என்று கூறியவர் -----

அ ) அறிஞர் அண்ணா

ஆ) கதே

இ) ஆபிரகாம் லிங்கன்

ஈ) பாரதியார்

விடை : ஆ ) கதே


14 ) மாற்றான் தோட்டத்து ----- க்கும் மணம் உண்டு என்றார் அண்ணா.

அ) ரோசா

ஆ) முல்லை

இ) மல்லிகை

ஈ) சம்பங்கி

விடை : இ )  மல்லிகை

15 ) இளைஞர்கள் உரிமைப்
போர்ப்படையின் -------  முனைகள் என்றார் அண்ணா.

அ) பேனா

ஆ) கத்தி

இ) வாள்

ஈ) ஈட்டி

விடை : ஈ )  ஈட்டி


************    **************  *************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

0 Comments