10 - ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு - 09 - 02 -2022
தமிழ்
காலம்: 3.00 மணி
மதிப்பெண்கள் : 100
அறிவுரைகள் : (1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் - அறைக்கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
(2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்புகள் : (i) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
(ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - 1 (மதிப்பெண்கள் : 15)
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 15 X 1 = 15
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை :
(அ) குலைவகை
(ஆ) மணிவகை
(இ) கொழுந்துவகை
(ஈ) இலைவகை
விடை :ஆ ) மணிவகை
2 .“பெரிய மீசை” சிரித்தார் அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது ?
(அ) பண்புத்தொகை
(ஆ) உவமைத்தொகை
(இ) அன்மொழித்தொகை
(ஈ) உம்மைத்தொகை
விடை : (அ) பண்புத்தொகை
3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் :
(அ) எந்+தமிழ்+நா
(ஆ) எம்+தமிழ்+நா
(இ) எந்த+தமிழ்+நா
(ஈ) எந்தம்+தமிழ்+நா
விடை : ஆ) எம்+தமிழ்+நா
4. கீரி பாம்பு - இச்சொல்லில் மறைந்துள்ள தொகையைத் தேர்க.
(அ) உம்மைத்தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) உவமைத்தொகை
(ஈ) பண்புத்தொகை
விடை : அ ) உம்மைத்தொகை
5. மொழிஞாயிறு என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் :
(அ) பெருஞ்சித்திரனார்
(ஆ) பாரதியார்
(இ) தமிழழகனார்
(ஈ) தேவநேயப்பாவாணர்
விடை : ஈ ) தேவநேயப்பாவாணர
6 . பொதுமொழியைத் தேர்வு செய்க.
(அ) கண்ணன் வந்தான்
ஆ ) எட்டு
(இ) படித்தான்
ஈ ) அம்மா
விடை : ஆ ) எட்டு
7 ) தாள், தண்டு, கோல், தூறு, கழி முதலிய தமிழ்ச்சொற்கள் குறிப்பதைத்
தேர்ந்தெடுக்கவும்.
(அ) தாவரங்களின் கிளைப்பகுதியைக் குறிக்கும் சொற்கள்
(ஆ) இலைகளின் பெயர்களைக் குறிக்கும் சொற்கள்
(இ) தாவரங்களின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்
(ஈ) தாவரங்களின் காய்ந்த பகுதியைக் குறிக்கும் சொற்கள்
விடை : இ ) தாவரங்களின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்
8 ) 'நாற்றிசையும் செல்லாத நாடில்லை"
'ஐந்து சால்பு ஊன்றிய தூண்" என்ற செய்யுள் அடிகளில் உள்ள எண்ணுப்
பெயர்களுக்கான தமிழ் எண்ணுருக்களைத் தேர்க.
(அ) அ, எ
(ஆ) க, ங
(இ) ங, உ
(ஈ) ச, ரு
விடை : ஈ ) ச , ரு
9 ) இருக்கும் போது உருவமில்லை - இல்லாமல் உயிரினம் இல்லை :
இப்புதிருக்கான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) காற்று
(ஆ) புதுமை
(இ) காடு
(ஈ) விண்மீன்
விடை : அ ) காற்று
10 ) ' தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே !" பாடல் அடியில்
தென்னன்” என்று குறிப்பிடப்படும் மன்னன் :
(அ) சேர மன்னன்
(ஆ) பாண்டிய மன்னன்
(இ) சோழ மன்னன்
(ஈ) பல்லவ மன்னன்
விடை : ஆ ) பாண்டிய மன்னன்
11 ) உணவு குறித்த பழமொழியைத் தேர்க.
(அ) காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
(ஆ) அக்கரைக்கு இக்கரை பச்சை
(இ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
(ஈ) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
விடை : ஈ ) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை
தருக.
காற்றே, வா.
எமது உயிர் - நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு.
சக்தி குறைந்து போய், அதனை அவித்து விடாதே.
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்
நின்று வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்.
12. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” - இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள
நயங்கள் :
(அ) உருவகம், எதுகை
(ஆ) மோனை, எதுகை
(இ) முரண், இயைபு
(ஈ) உவமை, எதுகை
விடை : ஆ ) மோனை , எதுகை
13, "லயத்துடன்” என்ற சொல்லின் பொருள் :
(அ) சீராக
(ஆ) வேகமாக
(இ) தொலைவாக
(ஈ) இனிமையாக
விடை : அ ) சீராக
14. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க.
(அ) தருமாறு, விடாதே
(ஆ) நெடுங்காலம், கொண்டிரு
(இ) வீசு, விடாதே
(ஈ) அவித்துவிடாதே, மடித்துவிடாதே
விடை : ஈ ) அவித்துவிடாதே , மடித்து விடாதே
15. இப்பாடலின் ஆசிரியர் :
(அ) பெருஞ்சித்திரனார்
(ஆ) பாரதிதாசன்
(இ) பாரதியார்
(ஈ) தமிழழகனார்
விடை : இ ) பாரதியார்
பகுதி - II (மதிப்பெண்கள் : 18)
பிரிவு - 1
குறிப்பு எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்கவும். 21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக
விடையளிக்கவும். 4 x 2 = 8
16. வசன கவிதை - குறிப்பு வரைக.
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது.
ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க :
(அ) தேவநேயப் பாவாணர்- உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக
இருந்தவர்.
உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார் ?
(ஆ) பூவின் தோற்ற நிலை அரும்பு எனப்படும்.
பூவின் தோற்ற நிலையின் பெயர் என்ன ?
18. பாவலரேறு பெருஞ்சித்திரனார் படைத்த நூல்களுள் எவையேனும்
இரண்டின் பெயர்களை எழுதுக.
* உலகியல் நூறு
* பாவியக்கொத்து
19. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுகூலங்கள் இரண்டின் பெயர்களை
எழுதுக.
* வரகு
* காடைக்கண்ணி
20. தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களை எழுதுக.
தாவரங்களின் இலை வகைகளைக்
குறிக்கும் சொற்கள்.
இலை: புளி, வேம்பு
தாள்: நெல்,புல்
தோகை: சோளம், கரும்பு
ஓலை: தென்னை , பனை
சண்டு: காய்ந்த தாளும் தோகையும்
சருகு: காய்ந்த இலை.
21. 'எப்பொருள் எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
பிரிவு - 2
குறிப்பு : எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை
அளிக்கவும். 5X2= 10
22. “எழுது என்றாள்” என்பது விரைவு காரணமாக “எழுது எழுது என்றாள்” என
அடுக்குத் தொடரானது.
“சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
சிரித்துச் சிரித்துப் பேசினார்.
23 ) நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்பை எழுதுக.
(அ) கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது.
வாடைக் காற்று வீசியது.
தலைப்பு : காற்றின் பாடல்
(ஆ) குயில்களின் கூவலிசை, புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், ஆறைக்காற்றின் ஆலோலம்.
தலைப்பு : வானத்தின் நடனம்
24. விடுபட்ட எழுத்துகளை நிரப்ப அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து
ஒளிந்துள்ள நூலின் பெயரை எழுதுக.
இ-கு (பறவையிடம் இருப்பது) - இறகு
கு-தி (சிவப்பு நிறத்தில் இருப்பது) - குருதி
வா- (மன்னரிடம் இருப்பது) - வாள்
அ-கா (தங்கைக்கு மூத்தவள்) - அக்கா
ம- (அறிவின் மறுபெயர்) - மதி
பட- (நீரில் செல்வது) - படகு
25. “வேங்கை" என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
வேங்கை - மரத்தைக் குறிக்கும்
வேம் + கை = வேகின்ற கை
26. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
“தேணிலே ஊரிய செந்தமிழின் - சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லல்வும் - நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”.
விடை :
“தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
தேறும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே”.
27. கரும்பு தின்றான், வீசு தென்றல் - இவற்றின் தொகை வகையை எழுதுக.
கரும்பு தின்றான் - வேற்றுமைத்தொகை
விசு தென்றல் - வினைத்தொகை
28. கலைச்சொற்கள் தருக.
(அ) Discussion - கலந்துரையாடல்
(ஆ) Modern literature - நவீன இலக்கியம்
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
சொற்களை இணைத்து நான்கு புதிய சொற்களை உருவாக்குக.
தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, சேய், மேகலை, வான், பொன்
* தேன் மழை
* மணிமேகலை
* பொன் விலங்கு
* வான் மழை
பகுதி - III (மதிப்பெண்கள் : 18)
பிரிவு - 1
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்குச் சுருக்கமாக
விடையளிக்கவும். 2X3=6
29. “புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது',
இதுபோல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்கவும்.
(i) கண்ணன் வயலில் நெல் நாற்றிற்குத் தண்ணீர் பாய்ச்சினான்.
(ii) தாத்தா நிறைய தென்னம்பிள்ளைகளை வாங்கி வந்தார்.
(iii) கத்தரி நாற்றில் வெட்டுக்கிளிகள் இருந்தன.
(iv) மாங்கன்று மழைக்குப் பிறகு தளிர் விட்டுள்ளது.
(v) வாழைமரத்தினடியில் வாழைக்கன்றுகள் உள்ளன.
30. நில வகைகளைக் குறிக்கும் சொற்கள் மூன்றினையும், நீர்நிலைகளின்
வகைகளைக் குறிக்கும் சொற்கள் மூன்றினையும் எழுதுக.
நில வகை
* தரிசு
* கரிசல்
* புறம்போக்கு
நீர்நிலைகள்
* ஆறு
* குளம்
* குட்டை
31 ) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறவொழுக்கங்களும் அமைந்திருக்கும். நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே,
பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும்
நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். திருந்திய மக்களை மற்ற உயிரிகளினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும்.
(அ) மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக்காட்டுவது எது?
மொழி
(ஆ) எதனால் பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை
உடையவராக இருந்திருக்கின்றனர்?
நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே,
பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும்
நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர்
(இ) மொழி எதனை அளந்தறிவதற்குச் சிறந்த வழியாக உள்ளது?
ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும்.
பிரிவு - 2
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு - மட்டும்
விடையளிக்கவும்.
34 - ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
32. எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை எழுதுக.
* நற்றிணை
* குறுந்தொகை
* ஐங்குறுநூறு
* பதிற்றுப்பத்து
* பரிபாடல்
* கலித்தொகை
* அகநானூறு
* புறநானூறு
33. காற்றே, வா.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா ;
(அ) பாடலில் இடம் பெற்றுள்ள மயலுறுத்து என்ற சொல்லின் பொருளை
எழுதுக.
மயறுத்து - மயங்கச்செய்
(ஆ) அடிமோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
மகரந்தத்
மயலுறுத்து - ம - அடிமோனைச்சொல்
(இ) பாரதியார் எதனை வாசனையுடன் வரச் சொல்லுகிறார்?
பாரதியார் காற்றை வாசனையுடன் வரச்சொல்கிறார்.
33 ) அடிபிறழாமல் எழுதுக.
(அ) 'தென்னன் மகளே "எனத் தொடங்கும் பாவலரேறுபெருஞ்சித்திரனாரின் பாடல்.
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே
(அல்லது)
(ஆ) “அன்னை மொழியே!” எனத் தொடங்கி “மண்ணுலகப் பேரரசே!"
என முடியும் “அன்னை மொழியே” பாடல்.
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
பிரிவு - 3
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக
விடையளிக்கவும்.
35. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். -
இக்குறட்பாவினை அலகிட்டு வாய்ப்பாடு
தருக.
சீர் அசை வாய்பாடு
ஒழுக் / கம் - நிரை நேர் புளிமா
விழுப் / பம் - நிரை நேர் புளிமா
தர / லான் - நிரைநேர் புளிமா
ஒழுக் / கம் - நிரை நேர் புளிமா
உயி / ரினும் - நிரை நிரை கருவிளம்
ஓம் / பப் - நேர் நேர் தேமா
படும் - நிரை மலர்
36.அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது,
பிறந்தது, பிறவாதது”
இவை அனைத்தையும் யாம் அறிவோம்.
அது பற்றி உமது அறிவுரை
எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில்
அடிக்கோடிட்ட வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
வினைமுற்று தொழிற்பெயர்
அறிந்தது அறிதல்
அறியாதது அறியாமை
புரிந்தது புரிதல்
புரியாதது புரியாமை
தெரிந்தது தெரிதல்
தெரியாதது தெரியாமை
பிறந்தது பிறத்தல்
பிறவாதது பிறவாமை
37. "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்” - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின்
வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
* உடுப்பதூஉம் - இன்னிசை அளபெடை
* உண்பதூஉம் - இன்னிசை அளபெடை
இன்னிசை அளபெடை இலக்கணம்
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
பகுதி IV (மதிப்பெண்கள் : 25)
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 5 X 5 = 25
(அ) "எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரி க்கும்" என்ற
பாடலடியைக் கொண்டு, ஐந்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவதற்கான
உரைக்குறிப்பு எழுதுக.
உலகில் உள்ள தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று என்றால் மிகையாகாது. இன்றும்
எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொன்மையைக் காத்து சீரும் சிறப்போடும் வாழ்ந்துகொண்டிருக்கிறது
நம் தமிழ் மொழி.
தமிழ்மொழி தொன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பலவகை பெருமைகளை ஒருங்கேயுடையது என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்.
முண்டாசு கவிஞன் மகாகவி பாரதி அவர்கள் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றார். அந்தளவிற்கு தமிழ்மொழியின் பெருமையை உலகறியும். மேலும் தமிழ்மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துகளை எளிதாக உச்சரிக்கலாம்.
தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டு அறிஞர் டாக்டர் ஜி.யூ.போப்., தமிழை நன்கு கற்று அதன்
சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் “இங்கே ஒருதமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று பொறிக்கச் செய்தார்.
உலகின் மூத்த மொழி தமிழ்மொழி மூத்தக்குடி வளர்த்த மொழியாம் தமிழ்மொழி மற்ற மொழிகளைக்
காட்டிலும் இனிமையும், பெருமையும் பல்வேறு இலக்கிய தொன்மைகளையும் இயல், இசை, நாடகம் முத்தமிழ் கொண்ட மொழியாம் நம் தமிழ் மொழி, தமிழ்மொழிக்கு ஈடு இணை இவ்வுலகில் எந்த மொழியும் இல்லையென பெருமையாக எடுத்துரைப்பேன்.
எந்தன் தமிழின் பெருமையை உலக அரங்கு முழுக்க எடுத்துரைப்பேன் அதுவே நான் செய்த பாக்கியம்
என்று பலர் கூறுகின்றனர்.
(அல்லது)
(ஆ) காற்றே வா! என்னும் பாரதியாரின் வசன கவிதை கருத்தைச் சுருக்கமாக
எழுதுக.
(i) மலர்களில் இருந்து மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு மனதை மயங்கச் செய்கின்ற இனிய நறுமணத்துடன் வருமாறு காற்றை அழைக்கிறார்
(ii) மேலும் இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் மிகுதியான உயிர்வளியை எங்களுக்குக்
கொண்டுவந்து கொடு என்கிறார்.
(iii ) எமது உயிர் நெருப்பு நீண்டநாள் நின்று நல்ல ஒளி தருமாறு நன்றாக வீசிடு.
(iv ) உன்னுடைய சக்தி குறைந்து போய் அவித்து விடாதே, பேய் போல வீசி அதனை மடித்து விடாதே .
(v ) மெதுவாக ஒரே சீராக நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டேயிரு. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உன்னைப் புகழ்கிறோம். உன்னை வழிபடுகின்றோம் என்று பாரதியார் கூறுகிறார்.
39. (அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்
விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப்
பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புநர்
பா. கவியரசன் ,
பாரதி நகர் , கருப்பாயூரணி ,
மதுரை , 20.
பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்,
சென்னை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : உணவு விடுதியில் தரமற்ற உணவு அளித்தது மற்றும் கூடுதல் விலை பெற்றது தொடர்பாக.
வணக்கம். நான் என் குடும்பத்தினருடன் மதுரை ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற விடுதியில் உணவு உண்டோம். அங்கு அளிக்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்தது. அதனால்
அவ்வுணவினை உண்ட பிறகு எங்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு விட்டது. மேலும் அவ்வுணவிற்கான
விலையும் கூடுதலாக வசூலித்தனர்.
தரமற்ற உணவு அளவு, குறைவாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது. அவ்வுணவு விடுதியில் தயாராகும் உணவினைத் தரப் பரிசோதனை செய்ய வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள் மட்டும் இல்லை. என்னைப் போல் பிறருடைய எதிர்பார்ப்பும் இதுதான். கூடுதல் விலை வசூலிப்பதற்கான காரணத்தையும் அறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இக்கடிதத்துடன்தரமற்ற உணவிற்கானசான்றும் கூடுதல் விலைக்கானசான்றும் இணைக்கப்பட்டுள்ளன.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
பா.கவியரசன்.
உறைமேல் முகவரி
பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையம்,
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்,
சென்னை.
(அல்லது)
(ஆ) புதிதாகத் திறன் பேசி வாங்கியுள்ள தங்கைக்கு அதை முறையாகப்
பயன்படுத்தும் வழிகாட்டுதல்களைக் கூறிக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கருத்தினை
ஐந்து தொடர்களில் எழுது
41. விழுப்புரம் மாவட்டம் சுப்பையா நகர், சிதம்பரனார் தெருவில் உள்ள 21 ஆம்
இலக்க வீட்டில் குடியிருக்கும் திருவுடையான் மகள் எழிலி, கிளை
நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர், தம்மை எழிலியாகக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
நூலக உறுப்பினர் படிவம்
விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழு
மைய/கிளை/ஊர்ப்புற நூலகம். ....கிளை நூலகம்
அட்டை எண்.
உறுப்பினர் சேர்க்கை அட்டை
உறுப்பினர் எண் : 1001
பெயர் : எழிலி
தந்தை பெயர் : திருவுடையான்
பிறந்த தேதி : 16.2.2006..
வயது : 15
படிப்பு : 10 ஆம் வகுப்பு
தொலைபேசி எண் : 0123456789
முகவரி : 21 , சிதம்பரனார் தெரு ,
சுப்பையா நகர் ,
விழுப்புரம் மாவட்டம்
நான் ------ நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ ஐம்பது சந்தா தொகை ரூ. பத்து ஆக மொத்தம் ரூ. அறுபது ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.
இடம்: விழுப்புரம்
நாள் : 09 - 02 - 2022
தங்கள் உண்மையுள்ள ,
எழிலி.
திரு/திருமதி/செல்வி/செல்வன். எழிலி
அவர்களை எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்
அறிவுடைநம்பி.
(அ) அன்றாட வாழ்வில் இன்சொல் பேசுவதால் ஏற்படும் நன்மைகள்
ஏதேனும் ஐந்தினை எழுதுக.
* பிறர் மனம் மகிழும்
* அறம் வளரும்
* புகழ் , பெருமை சேரும்
* நல்ல நண்பர்கள் சேருவர்
* அன்பு நிறையும்
(அல்லது)
(ஆ) மொழிபெயர்க்க.
The Golden Sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds starts their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion,
The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes
everything pleasant: :
விடை :
விடியற்காலை
காலை நேரத்தில் பொன்னிறக் கதிரவன் தன் ஒளிமிக்க கதிர்களால் இருளை விரட்டும். பால் வண்ண மேகங்கள் அலைகளைத் தொடங்குகின்றன. வண்ண வண்ணப் பறவைகள் தங்கள் காலைநேரத்தை
மெல்லிசையோடு ஆரம்பிக்கின்றன. அழகான வண்ணத்துப்பூச்சிகள் பூக்களைச் சுற்றி நடனமாடும்.
பூக்களின் மணம் காற்றை நிரப்பும். காற்று மென்மையாய் எங்கும் வீசி அனைத்தையும் இனிமையாக்கும்.
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடைத் தருக.
பாரதியின் வசனநடை - சிட்டுக்குருவி
சிறுதானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப் பிடியிலே பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண், மற்றொன்று பெண்.
(அ) சிட்டுக்குருவியின் முதுகு குறித்து பாரதி கூறுவது என்ன?
(ஆ) பாரதியின் வீட்டில் எத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தன?
(இ) சிட்டுக்குருவியின் மூக்கு எப்படி இருந்தது?
(ஈ) உரைப்பத்தியில் இடம்பெற்றுள்ள அடுக்குத்தொடரை எழுதுக.
(உ) உமக்குப் பிடித்த பொருள் குறித்து வசன நடையில் இரண்டு வரிகள்
எழுதுக.
பகுதி V (மதிப்பெண்கள் : 24)
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். 3X8 = 24
(அ) தமிழ், சொல் வளமுடையதென்றும் தமிழ்நாடு பொருள் வளமுடையதென்றும் கூறுவதற்கான காரணங்களை விளக்குக.
(அல்லது)
(ஆ) தமிழ் மொழியின் தொன்மை, இலக்கிய வளம், சொல்வளம் குறித்து
ஒரு பக்க அளவில் எழுதுக.
(அ) பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு
உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டு எழுதுக.
(அல்லது)
(ஆ) புதிதாக வந்த மனிதனிடம் அன்னமய்யா நேசத்துடன் நடந்து
கொண்டதையும், அவருக்கு உணவளித்து மகிழ்ந்ததையும் விரிவாக எழுதுக.
45. (அ) குமரிக் கடல்முனையையும் வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி,
கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப்
பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாகக் கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ் என்னும்
தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
(ஆ) முன்னுரை - விண்நீர் உயிர் நீர் - விசும்பின் துளி பசும்புல் நுனி -
மழைநீரைச் சேமித்தல் நம் கடமை - முடிவுரை. குறிப்புகளைக் கொண்டு
“மழைநீர் சேகரிப்பு” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
******************* ********** ********
விடைத்தயாரிப்பு
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை. 97861 41410
மை. பெளஸி நிஸால் பேகம், தமிழாசிரியை ,
அரசு கள்ளர் மேனிலைப்பள்ளி,
பூசலப்புரம் , மதுரை.
**************** ************ ************
1 Comments
Sir 2nd Answer option 3 not 1
ReplyDelete