ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2006 - 2007
வினாக்களும் விடைகளும் - பகுதி - 1
01 முதல் 50 வரை - வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2006 - 2007
QUESTION & ANSWER - PART - 1
**************** ************* ***********
1. எட்டுத் தொகையுள் காலத்தால் முற்பட்ட நூல்
A) அகநானூறு
B) புறநானூறு
C) நற்றிணை
D) குறுந்தொகை
2 . சங்க இலக்கியத்தில் மிகக் குறைந்த அடிகளை உடைய பாடல்
A) ஐங்குறுநூறு
B) குறுந்தொகை
C) பரிபாடல்
D) நற்றிணை
3 . குறுந்தொகை நூலைத் தொகுத்தவர்.
A) உப்பூரி குடிகிழார்
B) கபிலர்
C) நக்கீரர்
D) பரணர்
4 . அகநானூறு பின்வரும் அடிகளைக் கொண்டிலங்குவது
A) 10 முதல் 28 அடி வரை
B) 11 முதல் 29 அடி வரை
C) 12 முதல் 30 அடி வரை
D) 13 முதல் 31 அடி வரை
5 . கலிப்பாவால் இயற்றப்பட்ட சங்க இலக்கியப் பாடல்
A) குறுந்தொகை
B) கலித்தொகை
C) அகநானூறு
D) புறநானூறு
6 . கோப்பெருஞ்சோழனோடு உயிர்நட்பு கொண்டு விளங்கிய புலவர்
A) எயிற்றியனார்
B) ஔவையார்
C) பிசிராந்தையார்
D) மோசிகீரனார்
7 . "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல். . எனும் வரிகள் இடம் பெறும் சங்க இலக்கியம்
A) குறுந்தொகை
B) கலித்தொகை
C) பதிற்றுப்பத்து
D) அகநானூறு
8 . பத்துப்பாட்டு நூல்களில் மிகுதியான அடிகளைக் கொண்ட நூல்
A) மதுரைக்காஞ்சி
B) நெடுநல்வாடை
C) பெரும்பாணாற்றுப்படை
D) திருமுருகாற்றுப்படை
9 . "ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று. ..”
எனும் வரிகள் இடம் பெறும் சங்க இலக்கியம்
A) பரிபாடல்
B) பதிற்றுப்பத்து
C) அகநானூறு
D) புறநானூறு
10. திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர்
A) நக்கீரர்
B) கபிலர்
C) அகத்தியர்
D) தொல்காப்பியர்
11. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் சங்க இலக்கியப் பாடலை இயற்றிய புலவர்
A) கபிலர்
B) ஔவையார்
C) கணியன் பூங்குன்றனார்
D) மோசி கீரனார்
12. மானவிஜயம் என்ற செய்யுள் நாடகம் இயற்றியவர்
A) கபிலர்
B) பரணர்
C) பரிதிமாற்கலைஞர்
D) மறைமலையடிகள்
13. மதுரைக் காஞ்சியில் இடம் பெறும் அடிகளின் எண்ணிக்கை
A) 872
B) 782
C) 287
D) 278
14. கார்காலம் என்று வழங்கப்படுவது
A) சித்திரை - வைகாசி
B) ஆவணி-புரட்டாசி
C) தை-மாசி
D) ஐப்பசி-கார்த்திகை
15. முல்லை நிலத்தின் தெய்வம்
A) முருகன்
B) திருமால்
C) வருணன்
D) இந்திரன்
16. பகைவரின் நிலத்தைக் கைக்கொள்ளலை விளக்கும் திணை
A) வஞ்சி
B) காஞ்சி
C) நொச்சி
D) உழிஞை
17. சோழன் கரிகாலனின் சிறப்பைக் கூறும் ஆற்றுப்படை நூல்
A) பெரும்பாணாற்றுப்படை
B) சிறுபாணாற்றுப்படை
C) பொருநராற்றுப்படை
D) கூத்தராற்றுப்படை
18. இருவருள் ஒத்த அன்பு அமையாத ஏற்றத் தாழ்வான காதல் நிலை
A) புணர்தல்
B) ஊடல்
C) இரங்கல்
D) பெருந்திணை
19. இன்னா நாற்பது எனும் கீழ்க்கணக்கு நூலின் ஆசிரியர்
A) கபிலர்
B) பரணர்
C) திருவள்ளுவர்
D) அம்மூவனார்
20. 'பழமொழி நானூறு' எனும் கீழ்க்கணக்கு நூலின் ஆசிரியர்
A) கணிமேதாவியார்
B) முன்றுறையரையனார்
C) மதுரைக் கண்ணங்கூத்தனார்
D) மாறன் பொறையனார்
21. இரட்டை மணிமாலையின் ஆசிரியர்
A) திருமூலர்
B) மாணிக்கவாசகர்
C) ஆண்டாள்
D) காரைக்காலம்மையார்
22. திராவிட சிசு என்று போற்றப்பட்டவர்
A) திருமூலர்
B) திருநாவுக்கரசர்
C) திருஞானசம்பந்தர்
D) மாணிக்கவாசகர்
23. "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.......' 'எனும் பாடலினைப் பாடியவர்
A) திருநாவுக்கரசர்
B) திருஞானசம்பந்தர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
24. "பரவை என்னும் என் காதலிக்கும் எனக்கும் பற்றாக உள்ள பெருமானே" என்று பாடலில் குறிப்பிட்டுள்ளவர்
A) திருநாவுக்கரசர்
B) சுந்தரர்
C) திருஞானசம்பந்தர்
D) மாணிக்கவாசகர்
25. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்களுள் ஒன்று
A) திருப்பாவை
B) திருவந்தாதி
C) திருமந்திரம்
D) திருக்கோவையார்
26. , "மானிடர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்று இறைவனிடம் தெய்வக் காதல் கொண்டவர்
A) ஔவையார்
B) குலசேகராழ்வார்
C) ஆண்டாள்
D) காரைக்காலம்மையார்
27. 'திருப்பாவை ஜீயர்' என்று போற்றப்படுபவர்
A) இராமானுஜர்
B) ஆதிசங்கரர்
C) அரவிந்தர்
D) குலசேகராழ்வார்
28. திராவிட வேதம் என்று புகழப்படுவது
A) திருவாய்மொழி
B) திருக்கோவை
C) திருக்குறள்
D) திருவாசகம்
29, நம்மாழ்வாரின் சீடர்
A) தொண்டரடிப் பொடியாழ்வார்
B) பெரியாழ்வார்
C) மதுரகவியாழ்வார்
D) திருமங்கையாழ்வார்
30. புறப்பொருள் வெண்பாமாலைக்கு மூல நூலாகத் திகழ்ந்தது
A ) புறநானூறு
B) பன்னிருபடலம்
C) வெண்பாப் பாட்டியல்
D) கலிங்கத்துப்பரணி
31. காரியாசான் எழுதிய நூல்
A) முதுமொழிக் காஞ்சி
B) கார் நாற்பது
D) சிறுபஞ்சமூலம்
C) ஏலாதி
32. பின்வருவனவற்றுள் ஒன்று புறப்பொருள் நூல் ஆகும்
A) கார் நாற்பது
B) களவழி நாற்பது
C) கைந்நிலை
D) இன்னிலை
33. காவிரிபூம்பட்டினத்தின் புகழ் பாடும் பத்துப்பாட்டு நூல்
A) முல்லைப்பாட்டு
B) குறிஞ்சிப்பாட்டு
C) பட்டினப்பாலை
D) நெடுநல்வாடை
34. நாலடியார் எனும் நீதிநூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
A) கால்டுவெல்
B) பெஸ்கி
C) இராபர்ட்-டி-நொபிலி
D) ஜி.யூ.போப்
35. கழுமலம் என்னும் இடத்தில் நடைபெற்ற போர் பற்றிய புறப்பொருள் நூல்
A) கலிங்கத்துப்பரணி
B) கார் நாற்பது
C) களவழி நாற்பது
D) தக்கயாகப் பரணி
36. சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூன்று அரசர்களையும் போற்றிப் பாடும் நூல்
A) முத்தொள்ளாயிரம்
B) மூவருலா
C) பதிற்றுப்பத்து
D) திருக்கோவையார்
37. சைவத் திருமுறைகளின் எண்ணிக்கை
A) 18
B) 17
C) 14
D) 12
38. அற்புதத் திருவந்தாதியின் ஆசிரியர்
A) திருமூலர்
B) ஔவையார்
C) காரைக்காலம்மையார்
D) பொய்கையார்
39. பத்தாம் திருமுறை என்று அழைக்கப்படுவது
A) திருவாசகம்
B) திருமந்திரம்
C) திருவந்தாதி
D) திருவிரட்டை மணிமாலை
40. 'அன்பே சிவம்' என்று தம் பாடலின் மூலம் வலியுறுத்தியவர்
A) திருஞானசம்பந்தர்
B) திருமூலர்
C) திருநாவுக்கரசர்
D) சுந்தரர்
41. தமிழில் தோன்றிய முதல் உரைநடை நூலாகக் கருதப்படுவது
A) இறையனார் களவியலுரை
B) இளம்பூரணர் உரை
C) சேனாவரையர் உரை
D) பரிமேலழகர் உரை
42. தமிழில் தோன்றிய முதற்காப்பியம்
A) கம்பராமாயணம்
B) சீவகசிந்தாமணி
C) மணிமேகலை
D) சிலப்பதிகாரம்
43. தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம்
A) பெரிய புராணம்
B) திருவிளையாடற்புராணம்
C) மணிமேகலை
D) சீவகசிந்தாமணி
44. நாதகுத்தனார் இயற்றிய காப்பியம்
A) நாககுமார காப்பியம்
B) யசோதர காப்பியம்
C) வளையாபதி
D) குண்டலகேசி
45. வெண்ணாவலுடையார் இயற்றிய சிறு காப்பியம்
A) யசோதர காப்பியம்
B) உதயணகுமார காவியம்
C) வளையாபதி
D) குண்டலகேசி
46. சரசுவதி அந்தாதியை இயற்றிய புலவர்
A) இறையனார்
B) நக்கீரர்
C) கம்பர்
D) கபிலர்
47. மூவருலா எனும் நூலின் ஆசிரியர்
A) கம்பர்
B) ஒட்டக்கூத்தர்
C) சேக்கிழார்
D) ஜெயங்கொண்டார்
48. கொன்றைவேந்தன் எனும் நூலை இயற்றியவர்
A) கபிலர்
B) பரணர்
C) ஔவையார்
D) நப்பசலையார்
49.. ஐந்திலக்கணத்திற்கும் விளக்கம் கூறிய முதல் இலக்கண நூல்
A) அகத்தியம்
B) வீரசோழியம்
C) நன்னூல்
D) தொல்காப்பியம்
50. தலைவன் தன் மனைவியிடத்து அனுப்பும் தூது
A) விறலிவிடு தூது
B) மேகவிடு தூது
C) கிள்ளைவிடு தூது
D) நெஞ்சுவிடு தூது
***************** **************** ********
தேர்வில் வெற்றி உங்களுக்கே !
வாழ்த்தும் ,
பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
***************** ************* **********
0 Comments