பொங்கல் திருவிழா - தமிழர் திருநாள் வாழ்த்து / PONGAL KAVITHAI

 

பொங்கல் வாழ்த்து - கவிஞர். தமிழ்செல்வி 


🫶அனைவரும் அன்பைப் பரிமாறும் திருவிழா 🫶

🙏ஆன்றோர் சான்றோரிடம் ஆசி வாங்கும் திருவிழா 🙏

📱இயந்திர வாழ்வில் இயற்கைக்கான ஓர் விழா 🌾

💠ஈடுயிணையில்லா தமிழரின் பாரம்பரியத் திருவிழா 👫

🪓உழவுக்கும் உழவனுக்கும் நன்றி சொல்லும் திருவிழா 🙏🙏

🖥️ஊடகங்களில் நாடகங்களில்லா கலைநிகழ்ச்சி திருவிழா🤹‍♂️

🐂எருதுகளெல்லாம் வாடிவாசலில் வரிசைகட்டி வரும் திருவிழா 🐂

🌾ஏர் பிடித்த உழவனை பாரோர் புகழும் திருவிழா 🎊

🌞ஐம்பூதத்தில் ஒன்றான அக்னிபகவானுக்கான திருவிழா 🌞

🙏🙏ஒற்றுமை பண்பை வளர்க்கும்அழகான திருவிழா 👐👐

🎤🎤ஒப்பின்மை சொல்லிட இயலாத திருவிழா 🔯🔯

⚜️⚜️ஓலைச்சுவடி காலந்தொடங்கி வலைவழி காலத்திலும் கடைபிடிக்கும் திருவிழா 📱

🥫ஔடதம் தவிர்த்து ஆரோக்கிய உணவு தரும் திருவிழா 🫛🥬

✅இஃது எஞ்ஞான்றும் எல்லோரும் போற்றும் திருவிழா வே♻️

🌾🌾தைப்பொங்கல் பொங்கலோ பொங்கல் திருவிழா 🎋

💐💐அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்💐💐

Post a Comment

1 Comments

  1. அருமை கவிஞருக்கு வாழ்த்துககள்

    ReplyDelete