10 ஆம் வகுப்பு - தமிழ் - ஒரு மதிப்பெண் - பலவுள் தெரிக ( பாடப்பகுதி வினாக்கள் ) இயல் 1 முதல் 9 முடிய / 10th TAMIL - PALAVUL THERIKA - EYAL 1 - 9 - QUESTIIN & ANSWER

 

பத்தாம்  வகுப்பு - தமிழ் 

இயல் 1 முதல் 9 முடிய

பாடப்பகுதி திறன் அறிவோம் -  பலவுள் தெரிக 

முன்னுரிமைப் பாடங்கள்

வினாக்களும் விடைகளும் 

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

வினா எண் 1 - 11

பலவுள் தெரிக.

****************    ***********    ************

         இயல் - 1 ( புத்தகப் பக்கம் எண் - 19 )

1. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள் இத்தொடரில் வண்ணமிட்ட பகுதி குறிப்பிடுவது

அ)இலையும் சருகும் 

ஆ)தோகையும் சண்டும் 

இ)தாளும் ஓலையும்

 ஈ) சருகும் சண்டும்

விடை : ஈ) சருகும் சண்டும்

2. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் எவ்வாறு வரும் ?

அ) எந்+தமிழ்+நா 

ஆ) எந்த+தமிழ்+நா 

இ) எம்+தமிழ்+நா 

ஈ) எந்தம் தமிழ்+நா

விடை : இ) எம்+தமிழ்+நா 

3 ' கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே

அ) பாடிய ; கேட்டவர் 

ஆ) பாடல் ; பாடிய 

இ) கேட்டவர் ; பாடிய 

ஈ) பாடல் ; கேட்டவர்

விடை : ஈ) பாடல் ; கேட்டவர்

4. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை

அ) குலை வகை 

ஆ) மணி வகை 

இ ) கொழுந்து வகை 

ஈ) இலை வகை

விடை : ஆ) மணி வகை 


      இயல் - 2 ( புத்தகப் பக்கம் எண் - 43 ) 


5 ) உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்"

 - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ) உருவகம், எதுகை 

ஆ) மோனை, எதுகை 

இ) முரண், இயைபு 

ஈ )  உவமை, எதுகை

விடை : ஆ) மோனை, எதுகை 

6. ' பெரியமீசை' சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை 

ஆ) உவமைத்தொகை 

இ) அன்மொழித்தொகை 

ஈ) உம்மைத்தொகை

விடை : இ) அன்மொழித்தொகை 

      இயல் : 3 ( பக்கம் எண் - 65 ) 

7 . பின்வருவனவற்றுள் முறையான தொடர்

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

விடை : இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

8. அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது

அ) வேற்றுமை உருபு 

ஆ) எழுவாய் 

இ) உவமஉருபு 

ஈ) உரிச்சொல்

விடை : அ) வேற்றுமை உருபு 

இயல் - 4 ( பக்கம் எண் - 93 )

9. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் 

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ) மருத்துவரிடம் நோயாளி 

ஈ) நோயாளியிடம் மருத்துவர்

விடை : ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

10. குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி 

ஆ) இடவழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி 

ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

விடை : இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி 

           இயல் - 5 ( பக்கம் எண் - 121 ) 

11. அருந்துணை என்பதைப் பிரித்தால்

அ) அருமை+துணை 

ஆ) அரு+துணை 

இ) அருமை+இணை 

ஈ ) அரு+இணை

விடை : அ) அருமை+துணை 

12. "இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்பது ---- வினா

“அதோ, அங்கே நிற்கும்." என்று மற்றொருவர் கூறியது ----- விடை

அ) ஐயவினா, வினாஎதிர் வினாதல் 

ஆ) அறிவினா, மறை விடை

இ) அறியாவினா, சுட்டு விடை 

ஈ) கொளல்வினா, இனமொழி விடை

விடை : இ) அறியாவினா, சுட்டு விடை 

13. "அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை" - 

என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்                ஆ) அறிவியல் 

இ) கல்வி                 ஈ) இலக்கியம்

விடை : இ) கல்வி    

இயல் - 6 ( பக்கம் எண் - 147 ) 

14. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

 ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

விடை :  இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

15. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். - இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?

அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்

விடை :  இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

16. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் இல்லாதவர்கள் இல்லாததால் 

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் 

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

விடை :  ஈ) அங்கு வறுமை இல்லாததால்

இயல் - 7 ( பக்கம் எண் - 178 )

17. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'
மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் முறையே

அ) திருப்பதியும் திருத்தணியும் 

ஆ) திருத்தணியும் திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும் 

ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

விடை : அ) திருப்பதியும் திருத்தணியும் 

18. 'தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்'

 என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்

அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்

 ஆ) மிகுந்த செல்வம் உடையவர்

இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்

 ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

விடை :  ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

19. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

அ) நாட்டைக் கைப்பற்றல் 

ஆ) ஆநிரை கவர்தல் 

இ) வலிமையை நிலைநாட்டல்

ஈ) கோட்டையை முற்றுகையிடல்

விடை : இ) வலிமையை நிலைநாட்டல்

20 தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ---

அ) திருக்குறள்              ஆ) புறநானூறு 

இ) கம்பராமாயணம்    ஈ) சிலப்பதிகாரம்

விடை : ஈ) சிலப்பதிகாரம்


இயல் - 8 ( பக்கம் எண் - 197 ) 

21. மேன்மை தரும் அறம் என்பது

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ) மறுபிறப்பில் பயன் பெறுவோம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

விடை : அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது


22. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல்
கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ) உதியன் : சேரலாதன் 

ஆ) அதியன் : பெருஞ்சாத்தன்

இ) பேகன் : கிள்ளிவளவன் 

ஈ) நெடுஞ்செழியன் : திருமுடிக்காரி

விடை : ஆ) அதியன் : பெருஞ்சாத்தன்

23. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் -----

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்

ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

விடை : அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

24. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ---

அ) அகவற்பா        ஆ) வெண்பா 

இ) வஞ்சிப்பா         ஈ) கலிப்பா

விடை : அ) அகவற்பா 

இயல் - 9 ( பக்கம் எண் - 223 )

25. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல் 

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம் 

ஈ ) வெளிநாட்டு முதலீடுகள்

விடை : ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்


26. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று -----,------வேண்டினார்

அ) கருணையன் எலிசபெத்துக்காக 

ஆ) எலிசபெத் தமக்காக

இ) கருணையன் பூக்களுக்காக 

ஈ) எலிசபெத் பூமிக்காக

விடை :  அ) கருணையன் எலிசபெத்துக்காக 

27 வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை         ஆ) தற்குறிப்பேற்றம் 

இ) உருவகம்       ஈ) தீவகம்

விடை : இ) உருவகம்  

28. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் -

இக்கூற்றிலிருந்து நாம்புரிந்துகொள்வது

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

விடை : ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

***************  *************   ************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   ********

Post a Comment

4 Comments