பேரையூர் - கமுதி - இராமநாதபுரம் மாவட்டம்
பேரு சொல்லும் ஊரு நம்ம பேரையூரு!
பெருமையுள்ள சொந்தம் சேரு இங்க பாரு!
இராம்நாடு மாவட்டமே வணங்கும் பாரு!
இராப்பகலா உழைக்கும் நம்ம சனம்தான் பாரு!
வானம் பாத்த பூமியிலே பிறந்தோமுங்க!
மானம் மருவாதையோட வளந்தோமுங்க!
டிஇஎல்சி பள்ளியில படிச்சோமுங்க!
படிச்சதால இப்ப நல்லா உசந்தோமுங்க!
கடலப்போல விரிஞ்சிருக்கும் கண்மாய்தானே!
களத்து மேட்ல தானியங்க குவியும்தானே!
காட்டுப் பருத்தி கலகலனு சிரிக்கும்போது
கவல எல்லாம் ஊரவிட்டு ஓடும்பாரு!
ஊருவிட்டு ஊருவந்து வாழ்ந்தாலும்
ஒற்றுமை என்றும் நல்லாவே நிலைச்சிருக்கும்!
திருவிழானு வந்துபுட்டா நட்புக்கூட்டம்
திமுதிமுனு ஓடிவந்து ஒன்னு சேரும்!
(பேரு சொல்லும்... )
0 Comments