அறிஞர் அண்ணா பிறந்த நாள் கவிதை
அடுக்கு மொழி
மிடுக்கு நடை
எடுக்கும் செயலில்
தடுக்க இயலா வெற்றி
கரகரப்புக் குரல் எனில்
பரபரப்பு உன் பேச்சு
சுறுசுறுப்பு உழைப்பு
விறுவிறுப்பு தமிழ்நடை
பேச்சொளிரும்
அழகு தமிழ்
முச்செலாம்
தமிழின் நலன்
ஒன்றே குலமென்ற
சமதர்மப் போக்கு
அன்றே சிந்தித்த
உயர்ந்த வாக்கு
ஒரு படி அரிசி
தந்து
பல படி உயர
வைத்தாய் அண்ணா
சமநீதி காக்க
வேண்டி
மனுநீதி நீக்க
நாளும்
புதுநீதி சமைத்தாய்
காஞ்சிப் பட்டினம்
தந்த
வாஞ்சை மிக்க
தமிழனே
பெரியாரின்
பாசத் தம்பி
கவைஞரின்
அன்புஅண்ணன்
எளியாரின்
பாதுகாவலன்
மீண்டும் எப்போது
பார்ப்போம்
மீண்டுவர இயலா
இடம் சென்ற
மன்னவனே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கவிஞர். தமிழ்மீனா
🙏🙏🙏🙏🙏🙏
0 Comments