சிறுவர் பாடல் - உழவன்

 

சிறுவர் பாடல் - உழவன்


உலக உயிர்கள் வாழ்ந்திடவே

உழைக்கும் உன்னதன் யாரு?

ஏரு தூக்கி நடைபோடும்

எங்கள் உழவன் பாரு!


வரப்பினைச் சீர் ஆக்கிடுவான்!

வயலில் விதையை விதைத்திடுவான்!

களைகள் பறித்துச் செடியைத்தான்

காத்து நமக்குத் தந்திடுவான்!


நன்செய் புன்செய் நிலமெங்கும்

நாற்றுகள் வாழச் செய்திடுவான்!

இயற்கை உரத்தைத் தூவித்தான்

இன்பம் நமக்குத் தந்திடுவான்!


அறுவடைக்கு ஆள் சேர்த்து

களத்தில் கொண்டு நிறைத்திடுவான்!

தானியங்கள் வீடு சேர

நலத்தில் விருப்பம் காட்டிடுவான்!


உழவன் ஒருவன் இருப்பதாலே

உலகம் இன்றும் சுழல்கிறதாம்!

உழவர் வாழ்க்கை உயர்ந்திடவே

உற்ற துணையாய் இருந்திடுவோம்!


மு.மகேந்திர பாபு.


Post a Comment

0 Comments