சிறுவர் பாடல் - வாழை மரம்

 


சிறுவர் பாடல் - வாழை மரம்


வாழை மரமாம்! வாழை மரம்!

வாழ வைக்கும் வாழை மரம்!

இலையும் பூவும் காயும் கனியென

இனிய வாழ்வைத் தரும் மரம்!


எங்கள் வீட்டுத் தோட்டத்தில்

எல்லோரும் நட்டு வைத்தோம்!

புதிய இலை தளிர்விட

புத்துணர்வு நாங்கள் பெற்றோம்!


பொங்கல் திரு நாளிலே 

புத்தரிசி பொங்கல் இட்டோம்!

தலை வாழை இலையிட்டு

தந்தைக்கு உண விட்டோம்!



பூப்பூத்து காயான நாளினிலே

புன்னகைதான் பூத்தது முகத்தினிலே!

பழம் வந்து சேர்ந்த பின்னே

பக்கத்து வீட்டிற்கும் பங்கிட்டோம்!


வாழையடி வாழையென வந்தன

அருகருகே குட்டி மரங்கள்!

வாழை மரம் போல நாமும்

வாழ்ந்திட இணையட்டும் கரங்கள்!


மு.மகேந்திர பாபு,

22-07-2025 / இரவு 10:44


Post a Comment

0 Comments