சிறுவர் பாடல் - தன்னம்பிக்கை
தம்பி தம்பி இங்கே வா!
தன்னம் பிக்கை கொண்டு வா!
வாழும் காலம் எல்லாமே
வண்ண மயமாய் வாழ்ந்திடலாம்!
உருவில் சிறிய எறும்பினை
உற்று நீயும் இங்கே பார்!
அளவில் பெரிய பொருளினை
அழகாய் எடுத்துச் செல்லுது பார்!
நத்தை முதுகை நீயும் பார்!
நன்றாய் வீட்டைச் சுமக்குது பார்!
தொங்கி வாழும் வீட்டினை
தூக்கனாங் குருவி கட்டுது பார்!
பருத்துத் தொங்கும் பெரிதான
பலாப்பழத்தின் காம்பைப் பார்!
வட்ட மான சக்க ரத்தின்
வாட்டம் போக்கும் அச்சாணி பார்!
வானில் பறக்கும் பறவையின்
வாழ்க்கை நிலையை எண்ணிப் பார்!
தன்னம் பிக்கை இருப்ப தனாலே
தனித்துவ மாய் வாழ்வதைப் பார்!
மு.மகேந்திர பாபு.
20-07-2025
இரவு 10:49
0 Comments