சிறுவர் பாடல் - சுத்தமே சுகம்

 


சிறுவர் பாடல் - சுத்தமே சுகம்


சுத்தம் வேண்டும் சுத்தம் வேண்டும்!

சுகமாய் வாழச் சுத்தம் வேண்டும்!

சுற்றுப் புறம் எங்கும் தானே

சுத்தம் இருந்தால் வெற்றி தானே!


குப்பைக் கூடை இரண்டு வைப்போம்!

குப்பை தினமும் பிரித்து வைப்போம்!

மட்கும் குப்பை உரமாய் மாறும்!

மட்காக் குப்பை வண்டியில் ஏறும்!


துணிப் பையைத் தூக்கிச் சென்றால்

துன்பம் என்றும் நமக்கு இல்லை!

நெகிழிப் பையை தூக்கி வந்தால்

இன்பம் என்றும் எங்கும் இல்லை!


கண்ட இடத்தில் எச்சில் துப்ப

காலம் நம்மை நோயில் தள்ளும்!

சாலை யோரம் அசுத்தம் செய்தால்

சாதனை எல்லாம் வேதனை சொல்லும்!


நம்மை நாமும் காப்பது போல

நாட்டை நாளும் காத்திட வேண்டும்!

நன்மை தினமும் கிடைத்திடவே

நாளும் சுத்தம் பேணிட வேண்டும்!


Post a Comment

0 Comments