சிறுவர் பாடல் - மனமே! குணமே!
இந்தக் காலச் சிறுவரிடம்
இருக்கும் குணங்கள் சொல்கின்றேன்!
கேட்பது உடனே கிடைத்திடவே
கேவிக் கேவி அழுகின்றார்!
பொறுமை சிறிதும் இல்லையே!
புன்னகை முகமும் இல்லையே!
அடம் பிடித்து அழுவதனால்
அனு தினமும் தொல்லையே!
பெற்றோர் சிறிது கண்டித்தால்
பேசா முகமாய் இருக்கின்றார்!
ஆசிரியர் அறிவுரை சொன்னாலே
அசிங்கம் என்று நினைக்கின்றார்!
தோல்வி வந்து தொட்டாலே
தோளை இழந்து துடிக்கின்றார்!
நம்பிக்கை மனதை இழந்துதான்
நாளும் கண்ணீர் வடிக்கின்றார்!
திறன் பேசியில் தொலைந்துதான்
திறமை இருப்பதை மறக்கின்றார்!
வீம்புக் குணத்தை விட்டாலே
வீட்டில் வெளியில் சிறக்கின்றார்!
மு.மகேந்திர பாபு,
20-07-2025
இரவு 10:30
0 Comments