சிறுவர் பாடல் - முயற்சி
சாதனை செய்து வாழ்ந்திடலாம்!
வேதனை நம்மிடம் வீழ்ந்திடலாம்!
வாழ்வில் மகிழ்ச்சி பொங்குமே!
வளமை என்றும் தங்குமே!
முயற்சி ஒன்றே வழியாகும்!
பயிற்சி அதற்கு விழியாகும்!
புதுமைகள் படைப்போம் வாருங்கள்!
புதிதாய்ப் பார்ப்பார் பாருங்கள்!
சின்னச் சின்ன தோல்விகள்தான்
சீர் படுத்தும் நம்மையே!
தோளைத் தொட்ட தோல்விகளால்
நாளை கிடைத்திடும் நன்மையே!
எறும்பும் தேனியும் நம்மைத்தான்
ஏற்றம் பெற்றிடத் தூண்டிடுமே!
விரும்பும் செயல்கள் எல்லாமே
வெற்றியாய்க் கழுத்தில் தொங்கிடுமே!
தடைகள் முன்னே நின்றாலும்
நடை போட்டுச் சென்றிடுவோம்!
வெற்றி மாலை சூடித்தான்
மக்கள் மனங்களை வென்றிடுவோம்!
0 Comments