சிறுவர் பாடல் - மிதிவண்டி
காலை மாலை வேளையில்
பள்ளி தினமும் செல்லவே
அப்பா வாங்கித் தந்தது!
அழகாய்ச் சாலையில் செல்லுது!
சாலை விதிகளை மதித்தே
மகிழ்வாய்த் தினமும் மிதித்தே
நண்பர் கூட்டம் செல்லுமே!
நன்மை பெற்றதைச் சொல்லுமே!
ஆள்கள் ஒதுங்கிச் சென்றிட
அழகாய் மணியும் அடிக்கலாம்!
நாள்கள் தினமும் ஓட்டித்தான்
நாமும் நன்கு படிக்கலாம்!
வண்டிச் சக்கரம் போலவே
வாழ்க்கைச் சக்கரம் ஓடுது!
வண்டி ஓட்டும் காலமே
வசந்தம் என்று பாடுது!
உடலும் வலிமை பெற்றிடும்!
உள்ளம் நல்லதைக் கற்றிடும்!
புதிய வாகனம் வந்தாலும்
மிதி வண்டிதான் நண்பனே!
0 Comments