சிறுவர் பாடல் - பறவைக்கூட்டம்
பறவைக் கூட்டம் பாருங்கள்
வானில் பறந்து செல்வதை!
வரிசை யாகப் பறந்துதான்
விதியை நமக்குச் சொல்வதை!
விடியற் காலை எழுந்திடும்!
விரைந்து வானில் பறந்திடும்!
தூரம் அதிகம் என்றாலும்
வீரம் இறகில் நிறைந்திடும்!
கூட்டை நன்கு கட்டிடும்!
கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்திடும்!
கண்டம் கடந்தும் வந்திடும்!
காட்சி நமக்குத் தந்திடும்!
வலசைப் பறவை என்றுதான்
வானம் ஏற்றுக் கொண்டது!
இளசைப் பறவை ஒன்றுதான்
பாட்டுக் குயிலாய் நின்றது!
கிடைக்கும் உணவைப் பங்கிட்டு
ஒற்றுமை உணர்வை உணர்த்திடும்!
பறவைக் கூட்டம் பார்த்துதான்
மனிதர் பயில வேண்டுமே!
0 Comments