காதல் என்பது - கவிதை

 


காதல் என்பது...


நேருக்கு நேர்

சந்தித்தும் பேசமுடியாமல்

மவுனங்கள்

நிமிடங்களை வழியனுப்ப

மலங்க மலங்க விழிப்பது.


காதல்

இருள் நிறைந்த

இதயங்களை வெளிச்சமாக்கும்.

வெளிச்சமாகவுள்ள 

இதயங்களை

இருளில் நிரப்பும்.


காதலியோடு உள்ள

தோழியர்களுக்கும்

பஸ்சில் டிக்கட் எடுக்க வைக்கும்.


காதல்

காதலி உடன் இல்லாமல்

இருந்தாலும்

அவளோடு இருந்த இடங்கள்

அன்று பேசியதை 

நினைவுபடுத்தும்.


காதல்...

கவிதைகளைப் படிக்க வைக்கும்

கவிதைகளை எழுதவைக்கும்.


காதல்...

விடுமுறை நாள்களில்

திரையரங்குகளை நிரப்பும்.

விழாக்காலங்களில்

வாழ்த்து அட்டைகளை

விரைவாய்

விற்றுத்தீரவைக்கும்.


காதல்...

தலையணையில்

விரலால் கோலம் போடவைக்கும்.

தனிமையில் தன்னைத்தானே

சிரிக்கவும் வைக்கும்.


காதல்...

அன்பைக் கொடுத்து

அன்பை எடுக்கும்.

மழைக்காலமும்

வெயில்காலமும்

மகிழ்ச்சிக் காலம்தான்

காதலிப்பவர்களுக்கு மட்டும்.


நன்றி - கதிவன் - சூரியகாந்தி - 06 - 05 - 2001

Post a Comment

0 Comments