மகிழ்வித்து மகிழ்வோம் - கவிதை

 

மகிழ்வித்து மகிழ்வோம் !


பிறக்கின்ற புத்தாண்டில்

பிரபஞ்சம் மகிழட்டும் !

சிறக்கின்ற செயல்களில்

சிந்தை நெகிழட்டும் !


உள்ளங்கள் கைகோர்த்து

உதவிகளைச் செய்யட்டும் !

இல்லங்கள் இன்பத்தை

இனிதே கொய்யட்டும் !


சுற்றுகின்ற பூமியெங்கும்

சுற்றுச்சூழல் சிறக்கட்டும் !

மகிழ்வித்து மகிழ்கின்ற

மனங்கள் பிறக்கட்டும் !


பண்பாடு நம்மோடு 

பயணித்து வரட்டும் !

அன்போடு அனைவருக்கும்

ஆன்றபெருமை தரட்டும் !


நன்றி - தமிழ்நாடு இபேப்பர்.காம் 01-01-224

Post a Comment

0 Comments