கயித்துக்கட்டில்- கவிதை

 

கயித்துக் கட்டில்


---------------------


கிராமத்தின் மறைந்துவரும்

பாரம்பரிய வரலாறு

தூங்கி எழுந்தால்

உடம்பிலில்லை தகராறு.


சில நாள் வீட்டில்

சில நாள் காட்டில்

சில நாள் களத்து மேட்டில்

எனத் தொடரும் பயணம்.


அழகாய்ப் பின்னப் பட்டிருக்கும்

கயிறோ கொச்சம்

தமிழர் மரபில்

அழிந்திராத மிச்சம்.


வீட்டு முற்றத்தை

அலங்கரிக்கும் கட்டில்

சிறு குழந்தைகளுக்கும்

அதுவே தொட்டில்.


உடல்  உழைப்பால்

உடனே வரும் தூக்கம்

கயித்துக் கட்டில் மறைகிறதே

என்பதுதான் ஏக்கம்.


நன்றியோடு எப்போதும்

தாங்கும் நம்மை

நாகரீகத்திலும் நசுங்காத

நாலு கால்  பொம்மை.


இயற்கைக் காற்றோடு 

இனித்திடுமே இன்பம்.

கட்டில் தவிர்த்தால்

ஒட்டிக் கொள்ளுமே துன்பம்.


மு.மகேந்திர பாபு.


நன்றி - தமிழ்நாடு இபேப்பர்.காம் - 29 - 05 - 2024

Post a Comment

0 Comments