கோடை மழை - கவிதை

 

கோடை மழை


மலைப்பிரதேசம்

மலைத்தும் களைத்தும் போனது.

வெப்பத்தின் கொடுமை தாங்காமல்

எறும்பென ஊர்ந்து

மக்கள் பெருங்கூட்டம்

தன்னை நோக்கி வந்ததால்.


ஆயிரமாயிரம் வாகனங்களின்

புகை  இயற்கையிடம்

பகையைத் தோற்றுவித்தன.


தங்குமிடம் கிடைக்காது

தவித்துப்போய்த் திரிகிறது 

ஒரு கூட்டம்.

இயல்பை விட மூன்று மடங்கு

கட்டணம் வசூலிக்கத்

தொடங்குகிறது காத்திருந்த விடுதிக் கூட்டம்.


கோடை வெப்பத்தினும்

கொடியதாக வெளிப்படுகின்றன

வியாபார மனங்கள்.


ஏழை எளியோரின்

மனங்களையும் குளிர்விக்க

இருந்த இடத்தையே

மலைப்பிரதேசமாக்கிச் சென்றது

கோடை மழை.


நன்றி : தமிழ்நாடு இபேப்பர்.காம் 26 -05-224

Post a Comment

0 Comments