காளை

 

காளை


உணவிற்கு உழுதது

மருத நிலத்தில்.

உணர்விற்கு நிற்கிறது

இன்று களத்தில்.


வாடி வாசலில் 

ஓடி வருகிறது.

காளையர்களைச் சுழற்றிவிட்டு

பரிசைப் பெறுகிறது.


திமில் பிடிக்கும்

வீரர்களுக்குத் தில்லாக

போக்குக் காட்டுகிறது.

மதிப்பைக் கூட்டுகிறது.


கொம்பால் நிலத்தைக்

குத்திக் கீறுகிறது.

தழுவ வருபவர்களைக்

கோவத்தால் சீறுகிறது.


முரட்டுக் காளைகளாலும்

விரட்டும் காளையர்களாலும்

தலை நிமிர்கிறது

தமிழர் திருநாள் .


மு.மகேந்திர பாபு ,

கருப்பாயூரணி , மதுரை .

செல் - 97861 4410

Post a Comment

0 Comments