இலக்கிய இன்பம் - தமிழ்
உலகம் முழுமையும் உலவும் தமிழே !
உயிரில் உணர்வில் கலந்த தமிழே !
உன்னை வணங்கி உரை தொடுக்கிறேன் !
உன்னில் இருந்தே வார்த்தை எடுக்கிறேன் !
மதுரை மண்தான் தமிழின் அடையாளம் !
மகிழ்வுடன் காண்போம் இலக்கியத்தின் ஆழம் !
வருகை தந்தோரை வரவேற்கிறது பேரவை !
இதயம் மலர்ந்து வணங்குகிறது பேரவை !
தமிழ்ச் சங்கத்தில் ஒன்று கூடினோம் !
வெற்றித் தமிழராய்ச் சிந்து பாடினோம் !
சித்திரையின் மாலைப் பொழுது மகிழுதையா !
பேரவையின் பெருமையை இன்று புகழுதையா !
0 Comments