லிமரைக்கூ கவிதைகள் - மு.மகேந்திர பாபு

 


லிமரைக்கூ கவிதைகள்


வானில் பறக்கும் பறவை.

உண்ட பழங்களின் விதைகளை எச்சமாக்கி

தொடர்கிறது மண்ணுடன் உறவை.


குதூகலத்துடன் புத்தாண்டுப் பிறப்பு.

ஆண்டின் நிறைவிற்குள் பேர் சொல்ல

செய்திட வேண்டும் சிறப்பு.


காளைகளைத் தழுவுதல் வீரம்.

காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்

பண்டைத் தமிழரின் ஈரம்.


தேனருந்தும் வண்ணத்துப் பூச்சி

பூக்களில் தினம் பார்க்கப் பார்க்க

நமக்குக் கண்கொள்ளாக் காட்சி.


அறிவைத் தேடும் கூட்டம்.

புத்தகக் கண்காட்சி தொடரத் தொடர

அரங்குகள் அதனைக் காட்டும்.


மு.மகேந்திர பாபு , 

கருப்பாயூரணி , மதுரை - 20

செல் - 97861 41410

Post a Comment

0 Comments