பொங்குது பொங்கல் - தைத்திருநாள் பாடல் - மு.மகேந்திர பாபு / PONGUTHU PONGAL - MAHENDRA BABU SONG

 


பொங்குது பொங்கல் - தைத்திருநாள்


புத்தம்புதுப் பொங்கப் பானை பொங்குது 

தமிழ்ப் பூமிதனில் மகிழ்ச்சிதானே தங்குது

புத்தம் புதுப் பச்சரி வேகுது

நித்தம் அது வேளாண்மையைக் கூறுது


அப்போது எப்போதும் முப்போகம் தானே !

தப்பாது தரணியிலே மாமழை தானே !

ஏருதூக்கிப் போகுதையா வீறுகொண்ட கூட்டம்

ஏற்றமுடன் தொடங்கிடுமே தைத்திருநாள் ஆட்டம்


மண்ணும் விண்ணும் மக்களுக்குக் கண்ணாகும் !

எண்ணம் எங்கும் உயர்வினாலே பொன்னாகும் !

அமிழ்தான தமிழாலே அகம் மகிழும்

அன்பான உறவாலே அகிலம் புகழும் 


வண்ணக் கோலம் வாசலிலே பூத்திருக்குதே !

கட்டிக் கரும்பு வாசலிலே காத்திருக்குதே !

மஞ்சள் செடி மங்களத்தைக் காட்டுதே !

எங்கள் வீட்டில் இன்பந்தனைக் கூட்டுதே !


உழவருக்குத் திருநாளாய் உள்ளத்திலே பெருநாளாய்

உன்னதத்தைத் தந்திடுமே வள்ளுவர் தினமே !

காணுகின்ற பொங்கலால் மாட்டிற்குப் பொங்கலால் 

காட்டாற்று வெள்ளமாய் மாறுது மனமே !


ஊருசனம் சொக்குதையா ஒலிபெருக்கி ஓசையிலே !

உறவு வந்து நிக்குதையா தோள்கொடுக்கும் ஆசையிலே !

கொட்டுச் சத்தம் குலவைச் சத்தம் கேட்டிட

தமிழராய் மகிழ்ந்திட தைத்திருநாள் மலர்ந்ததே !


மு.மகேந்திர பாபு.


Post a Comment

0 Comments