மாபெரும் திறனாளி - சிறப்புக் கவிதை - உலக மாற்றுத் திறனாளர் தினம் - 3 - 12 - 2023 / KAVITHAI - GREEN TAMIL

 

மாபெரும் திறனாளி

   

சாகசக்காரனை

அகண்ட விழியால்

அண்டம் வியக்க

ரசிப்போம் !

ஆச்சரியத்தில்

ஆழ்ந்து போவோம் !

சாகசக்காரனும்

தோற்றுத்தான் போவான்

மாற்றுத்திறனாளி முன் !

அகராதியில் 

மாற்றப்பட வேண்டும்

மாற்றுத்திறனாளியை

மாபெரும் திறனாளி என்று💪🏻

ஆண்டுக்கு ஒரு முறை

சாதனையாளர் பட்டியல் சோதனை

செய்யப்படுகிறது.

 மாபெரும் திறனாளிக்கோ

 அனுதினமும் சாதிக்கும் சர்வ

 வல்லமை! 

சவால்களைச் சலவை செய்யும்

 நெஞ்சுரம்! 

இலக்கையே சிந்திக்கும் மனத்திடம்!

 நான்முகன் எழுத்தையே மாற்றி

 அமைக்கும் மகாசக்தி! 

எண்ணி  எண்ணி வியக்கிறேன் !

 அகராதியில் மாற்றம் செய்வோம்

 மாற்றுத்திறனாளியை

 மாபெரும்திறனாளி !

என்று 🙏🏻

வணங்குகிறேன்🙏🏻💐

(உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3)


 கவிஞர்.ம.தன்சியா,

 தமிழாசிரியர், நகரவைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி.

Post a Comment

0 Comments