புத்தகம்
புத்தகம் நல்ல புத்தகம்
புத்தியை வளர்த்திடும் புத்தகம்
புதுமைகள் அடங்கிய புத்தகம்
வளமைகள் காட்டிடும் புத்தகம்
படங்கள் அடங்கிய புத்தகம்
பண்பை வளர்த்திடும் புத்தகம்
கதைகள் சொல்லிடும் புத்தகம்
கருத்தால் கவர்ந்திடும் புத்தகம்
சிறியவர் பெரியவர் அனைவரது
சிந்தையைத் தூண்டிடும் புத்தகம்
வறியவர் பலரைத் தன்னாலே
வாழ வைத்திடும் புத்தகம்.
தடங்கல் இன்றிப் பேசிடவே
தயார் செய்திடும் புத்தகம்
பாதைகள் வகுத்துச் சென்றிடும்
படிப்பதால் பலரையும் வென்றிடும்
விதையாம் நீதிகளை உள்ளத்தில்
வேரூன்றி வளர்த்திடும் புத்தகம்
மேதைகள் பலரை உருவாக்கியதும்
மேன்மை தாங்கிய புத்தகமே !
பாடலாக்கம்
மு.மகேந்திர பாபு ஆசிரியர்
0 Comments