மகிழ்ச்சி தந்த மங்கள்யான் - மு.மகேந்திர பாபு

 

மகிழ்ச்சி தந்த மங்கள்யான்
------------ -------- ---------------

ஆனந்தம் வந்தது கண்ணுக்குள்ளே
மங்கள்யான் பாய்ந்தது விண்ணுக்குள்ளே
சிகரம் பதித்திட தேடுதடா
செவ்வாயைச் சுற்றி ஓடுதடா !

பாரதி கண்டிட்ட கனவுதானே
பாரினில் நிகழ்ந்தது நனவாய்த்தானே !
மாற்றம் படைத்திட்ட விஞ்ஞானிகள்
ஏற்றம் கண்டிட்டோம் புரட்சியினால் !

அண்ணாந்து பார்த்திட்ட ஆகாயமும்
அருகினில் வந்தது அறிவினாலே !
செவ்வாயின் பெருமையை உணர்ந்திடத்தான்
புகைப்படம் அனுப்புது கருவியினாலே !

வானமெங்கும் ஆய்வுத் தோரணம்தான்
நம்ம விஞ்ஞானிகளே காரணம்தான் !
ஞானமெல்லாம் சேர்ந்ததனால் வந்த
சாதனை கண்டு மகிழ்ந்திடுவோம் !

பூமிப் பந்தினைப் புரட்டிப்போடும்
புரட்சிகள் தொடர்ந்தினி செய்திடுவோம் !
செவ்வாயெங்கும் இனி நாம்தானே
சிந்தையில் மகிழ்ச்சி எய்திடுவோம் !

பாடலாக்கம்

மு.மகேந்திர பாபு ( ஆசிரியர் )

------------ -------- ---------------


Post a Comment

0 Comments