புத்தாண்டே வருக ! ( குழந்தைப் பாடல் )
புத்தாடை அணிந்து நாமும்
புத்தாண்டை வரவேற்போம் !
பூமிப் பந்து நாளும் வளம்பெறவே
மரம் நட கரம்கோர்ப்போம் !
மனித நேயம் மலரச் செய்த
மாமழையைப் போற்றுவோம் !
மனமெங்கும் மகிழ்ச்சி நிறைந்திட
நேயக் கரங்கள் நீட்டுவோம் !
இயற்கை தந்த கொடைகளை
இன்பமாய் காப்போம் !
இயன்றவரை மனிதர் பிடியிலிருந்து
உடனடியாய் மீட்போம் !
புத்தாண்டில் புதுப்பயணம் தொடங்கிட
சபதங்களை எடுப்போம் !
மனக்குளத்தில் நிறைந்திருக்கும்
மாசுகளைத் துடைப்போம் !
புத்தாடை போலவே மனமும்
புதிதாக வைப்போம் !
புத்துணர்வால் ஆண்டுமுழுதும்
இதயங்களைத் தைப்போம் !
மு.மகேந்திர பாபு , கருப்பாயூரணி , மதுரை -20
பேசி - 96861 41410
0 Comments