பள்ளிக் கூடம் திறந்ததே ! - சிறுவர் பாடல் - .மு.மகேந்திர பாபு

 


பள்ளிக் கூடம் திறந்ததே !

சிறுவர் பாடல்.

பள்ளிக் கூடம் திறந்ததே !
கோடை விடுமுறை மறந்ததே !
துள்ளிக் கொண்டு வந்தோமே !
நண்பர்களுக்கு இனிப்பு தந்தோமே !

புத்தம் புதிய ஆடைகளும்
புத்தம் புதிய புத்தகங்களும்
சத்தம் நிறைந்த வகுப்பறையும்
சந்தோசத்தைத் தினமும் தந்திடுமே !

வரிசை முறையில் சென்றிடுவோம்
வழிபாட்டுக் கூடம் நோக்கித்தான் !
ஆசிரியர் கூறும் கருத்துக்களை
ஆர்வமாய் மனதில் தூக்கித்தான் !

சின்னச் சின்னக் குழுக்களாக
சிரித்தே தினமும் விளையாடுவோம் !
வண்ண வண்ணப் பூக்கள்மலர
விரும்பிச் செடிகள் நட்டுவைப்போம் !

ஆடல் பாடல் செயல்களாலே
ஆனந்தம் வகுப்பறையில் பொங்கிடுமே !
ஆண்டு முழுவதும் ஆசிரியரால்
கல்வி மனதில் தங்கிடுமே !

நன்மை பலவும் செய்திடவே
கல்வி கற்று உயர்ந்திடுவோம் !
மாணவர் நாங்கள் முயற்சித்தே
வீட்டையும் நாட்டையும் உயர்த்திடுவோம் !

பாடல் - இளசை.மு.மகேந்திர பாபு , மதுரை.
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments