புத்தாண்டை வரவேற்போம் !

 


புத்தாண்டை வரவேற்போம் !

புத்தாண்டு வருகுது
புத்துணர்வு  பெருகுது
வாணவெடி வெடிக்குது
வண்ணமாகச் ஜொலிக்குது !

வாழ்த்துக்களைச் சொல்லுவோம்
வாழ்க்கையிலே வெல்லுவோம்
மகிழ்ச்சிதனை அள்ளுவோம்
மாணவராய்த் துள்ளுவோம் !

நல்லதையே ஏற்றிட
உறுதிமொழி எடுப்போம் !.
தீயதைக் கைவிட
தீர்க்கமாய் இருப்போம் !

அனைவரையும் நினைத்திடுவோம்
உற்றார் உறவினராக  !
அன்பினால் நனைத்திடுவோம்
தோழர் தோழியராக !

சுற்றுச்சூழல்  நலமாக
மரங்களையே நட்டிடுவோம் !
இயற்கையை அழிக்கின்ற
நெகிழிப்பையை  விட்டிடுவோம் !

வீட்டையும் நாட்டையும்
வளம்பெறச் செய்திடுவோம் !
வெற்றிகளைக்  குவித்து
மகிழ்வாய் வாழ்ந்திடுவோம் !

மு.மகேந்திர பாபு  -  பட்டதாரி தமிழாசிரியர் ,

Post a Comment

0 Comments