ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1- குறுவினா - வினாக்களும் விடைகளும் / 9th TAMIL - EYAL 1 - KURUVINA - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 1 , அமுதென்று பேர்

மதிப்பீடு

குறுவினா - வினாக்களும் விடைகளும்

 1 ) நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது ?

      நாங்கள் பேசும் மொழி , தென் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது.


2 ) தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

   வாழ்வியல் கூறுகளை நுட்பமாகக் கூறுவதோடு , மானிட இனத்தின் மேலான வாழ்க்கை வழிகாட்டியாக விளங்கும் அறிவுக் களஞ்சியம்  பற்றிக் கூறும் ,

" மானிட மேன்மையைச் சாதித்திடக்

குறள் மட்டுமே போதுமே ஓதி , நட " 

என்னும் இந்த அடிகளே என்னை மிகவும் ஈர்த்தன.

****************    **********   *************

3 ) கண்ணி என்பதன் விளக்கம் யாது ? 

    * அரும்புகளை எதிர்எதிராக வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர்.

    * அதுபோல இரண்டிரண்டு அடிகளில் , செய்திகளை எதுகையால் தொடுப்பது கண்ணி எனப்படும்.

****************   ************   ************

5 ) " அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள்

அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் " 

- இலக்கியங்களின் பாடுபொருளாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை ?

* அகம் - அகவாழ்க்கை - அகத்திணை .

புறம் - புறவாழ்க்கை - புறத்திணை .

* மக்களின் அகவாழ்க்கை முறைகளையும் , புறவாழ்க்கையோடு தொடர்புடைய செய்திகளையும் பாடுபொருளாகக் கொண்டு , இலக்கிய இலக்கணங்கள் தோன்றியுள்ளன என்பதனையே , இவ்வடிகள் உணர்த்துகின்றன.

******************   **********   *************


6 ) செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள், இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

               செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணை வினைகள் : படு, பெறு

ஆசிரியர் பாடம் படித்தார் - செய்வினை

பாடம் ஆசிரியரால் படிக்கப்பட்டது -  செயப்பாட்டுவினை

அரசன் கோவில் கட்டினான் - செய்வினை

கோவில் அரசனால் கட்டப்பட்டது -  செயப்பாட்டுவினை

****************   ***********  ************

7 ) வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைச் சுட்டுக.

வீணையோடு வந்தாள். - வேற்றுமைத்தொடர் (ஓடு - மூன்றாம் வேற்றுமை உருபு)

கிளியே! பேசு. - விளித்தொடர்.

*****************  ********   ****************

Post a Comment

2 Comments

  1. தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து ஆசியா ஆப்பிரிக்கா ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து வரும் போது அந்த நாள் காலை உணவு ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் தங்கி இருக்கும் என நினைக்கிறேன்

    ReplyDelete