கவிதை - இயற்கை
( வெற்றிக்கொடி நாளிதழுக்கு )
மலர்ந்ததும்
சில மணிநேரங்களில் மரணம் என்று தெரிந்த பூக்கள்
பூக்காமல் இருப்பதில்லை.
மனிதனைக் கண்டு இயற்கை
அஞ்சி ஓடுவதில்லை.
கனி தரும் மரத்தை மறந்து
கணினி முன் மனிதன் என்று அமர்ந்தானோ ,
அன்றே குறைந்தது மனிதனின் மகிழ்ச்சி.
பச்சைக் கம்பளி போர்த்திய
மரங்களை அழித்து ,
என்று தொழிற்சாலைகள்
உருவாக்கினானோ
அன்றே தெரிந்தது
மனிதனின் அரக்ககுணம்.
சேவை செய்யும் இயற்கையை
தன் தேவைக்காக
என்று அழித்தானோ ,
அன்றே புரிந்தது மனிதனின்
சுயநலம்.
இயற்கையின் அருமையை
அறியாத மனிதனே !
நீ அழிப்பது இயற்கை அல்ல.
உன்னில் பாதியை !
ம.சஹானா ,
ஒன்பதாம் வகுப்பு ,
TVS பதின்ம மேல்நிலைப் பள்ளி , வீரபாஞ்சான் , மதுரை.
0 Comments