மண்வளமே மனித வளம் ! பாடல் - மு.மகேந்திர பாபு.

 

மண்வளமே மனித வளம் ! பாடல் - மு.மகேந்திர பாபு.

மண்வளமே  மனுச வளம்
இதப் புரிஞ்சுக்கிட்டா நாளும் நலம்
உயிர்கள் வாழ்வதற்கு மண்தான் களமே !
உலகம் செழித்திடனும் மண்ணால் தினமே !

சரணம் 1

பாலீத்தீனு பையின் பக்கம் போகாதீங்க
மண்ண பாழ்படுத்தக் காரணமா ஆகாதீங்க
துணிப் பையைத் தூக்கிக்கிட்டுப் போனா
வாழ்க்கை இனித்திடுமே நாளை நல்ல தேனா

கண்ட இடத்தில் எச்சிலத்தான் துப்பாதிங்க
காலன் கயிறு கொண்டு வந்திடுவான் தப்பாதுங்க
புகைப் பழக்கம் பக்கம் நீங்களுந்தான் போகாதீங்க
உயிரோடு தினம் தினந்தான் சாகாதீங்க

சரணம் 2

நாட்டு மாட நாமதான வளர்த்திடுவோம்
நஞ்ச புஞ்ச எல்லாத்துக்கும் எரு இடுவோம்
செயற்கை உரத்தை அடியோடு குறைத்திடுவோம்
பூச்சிக் கொல்லி அடிப்பதையும் நிறுத்திடுவோம்

பன்னாட்டு பானம் பருகுவதை விட்டுடுவோம்
நம்நாட்டு பானத்த மகிழ்வோடு தொட்டுடுவோம்
கோடையத்தான் குளுமையாக்கச் செய்திடுவோம்
ஆடையத்தான் பருத்தியால நெய்திடுவோம்

சரணம் 3

ஆளுக்கொரு மரத்தத்தான நட்டு வைப்போம்
ஆசையோடு அதுக்கும் ஒரு பேரு வைப்போம்
பிள்ளைகளை மரம் நடத்தான் பழக்கிடுவோம்
பிறந்த நாளில் மரங்களைத்தான் நட்டுவைப்போம் !

இயற்கையோடு வாழும் வாழ்வே இன்பமானது
செயற்கையோடு வாழும் வாழ்வு துன்பமானது
கண்ணைப் போல காக்கனுமே மண்ண நாமதான்
இல்லனா காத்திருக்கும் தலமுறைக்கி நாளை தீமதான் !

மு.மகேந்திர பாபு - ஆசிரியர்
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments