மாமழை
----------
விண்ணில் இருந்து வருகுது
மண்ணில் ஆறாய்ப் பெருகுது
காணும் உள்ளம் உருகுது
தேனும் பாலும் தருகுது
ஆறு குளங்கள் நிறைக்குது
ஓடி மண்ணைக் கரைக்குது
பசுமை எங்கும் படருது
வளமை மீண்டும் தொடருது
தென்றல் காற்று வீசுது
தேகம் எங்கும் பேசுது
காடும் வயலும் அரும்புது
வீட்டில் செல்வம் திரும்புது
உயிர்கள் எங்கும் தங்குது
உயர்வு நம்மில் பொங்குது
வானம் தந்த செல்வத்தை
காத்து நாமும் மகிழ்வோமே !
பாடலாக்கம்
மு.மகேந்திர பாபு ஆசிரியர்
0 Comments