புதிய உலகம் படைக்கப் பிறந்தோம் நாங்கள் - பாடல் - மு.மகேந்திர பாபு

 


மு.மகேந்திர பாபு வின் பாடல்

புதிய உலகம் படைக்கப் பிறந்தோம் நாங்கள்
இனி பூக்கள் போல உதிர்வதில்லை நாங்கள்
பூமிப் பந்தைப் புரட்டிப் போடுவோம் நாங்கள்
புதுமை செய்து புரட்சி செய்வோம் நாங்கள்

கல்விதானே எங்களுக்கு இரு கண்கள்
கவலை அழித்து சாதிப்போம் நாம் புதுமைப் பெண்கள்
அடுப்படியில் இடுப்பொடிய இருந்ததெல்லாம் அன்று
அகிலம் போற்ற உயர்கின்றோம் புதுமைப் பெண்கள் இன்று

அச்சம் மடம் நாணம் எல்லாம் உள்ளுக்குள்ளதான்
அடிமை விலங்கு அடிமையாகும் சொல்லுக்குள்ளதான்
தலை குனிந்து நடக்க மாட்டோம் எங்கள் வாழ்விலே
தலை குனிவைத் தரவும் மாட்டோம் எங்கள் வாழ்விலே

சாதனைகள் எழுதிச் செல்வோம் ஏடு தன்னிலே
வேதனைகள் நீங்கச் செய்வோம் வீடு தன்னிலே
போதனைகள் நித்தம் சொல்வோம் நாடு தன்னிலே
சோதனைகள் தூக்கிக் கொல்வோம் தோள்கள் தன்னிலே !

மனித நேயம் காத்துதானே மாற்றம் செய்குவோம்
மரங்கள் வளர்த்து பசுமை காக்க ஏற்றம் செய்குவோம்
சாதி மதம் தூக்கி எறிவோம் மனதை விட்டுத்தான்
சாதனைகள் தொடர்ந்து செய்வோம் அச்சம்  விட்டுத்தான்

Post a Comment

0 Comments