வாழ்த்துப் பூக்கள் தந்தவனுக்குக் கண்ணீர்ப் பூக்கள் - மு.மகேந்திர பாபு

 



வாழ்த்துப் பூக்கள் 

                               தந்தவனுக்குக்

கண்ணீர்ப் பூக்கள்


தேமதுரைத் தமிழின்

ஓசையைத் 

திசையெங்கும் பரப்பியவன் .

திறமையாளர்களைத் தேடி

வாழ்த்துப் பூக்கள்

வார்த்தையால்

மனங்களை மகிழ்ச்சியால்

நிரப்பியவன்.


குரல்வளத்தால் 

அனைவரையும்

தம் பக்கம் ஈர்ப்பவன்.

ஆசிரியர்களுக்குக்

குறையென்றால் 

முன்னின்று தீர்ப்பவன்.


நீ தமிழாசிரியர்

கழகத்தின் முன்னோடி.

சங்க இலக்கியத்தையும்

பின் நவீனத்தையும்

ஒருங்கே காட்டும் கண்ணாடி.


சதம் தரும் 

தேர்ச்சியினைத் தருபவன் .

இதம் தரும் வார்த்தைகளால்

மாணவர்களின்

அன்பைப் பெறுபவன்.


உன்னால்

இலக்கிய மன்றங்கள்

எழுச்சி பெற்றன.

மாணவர் இதயங்கள்

பலவற்றைக் கற்றன.


கருத்தாளராய்

கனிவுடனும் கண்டிப்புடனும்

வலம் வந்தாய்.

நலம் தந்தாய்.



குடைபோல் கவிந்திருக்கும்

முடியரசனே !

மதுரையின் மகத்தான

அடையாளமே !


உன் முகம் கண்டு

மகிழ்ந்த எங்களால்

அகம் கண்டு

அரவணைத்துத் 

தேற்ற இயலவில்லையே !


எத்தனையோ நிகழ்வுகளில்

பேசுபொருள் தந்தவனே !

இன்றைய நினைவேந்தலின்

பேசுபொருளாய் ஆனாயே !


கண்ணீர்ப்பூக்களுடன் ,

                                  பாபு.


Post a Comment

0 Comments