காற்றிலாடி வருகுது - சியாமளவாணி பண்பலை - மு.மகேந்திர பாபு.

 

காற்றிலாடி வருகுது - புது
கானம்பாடி வருகுது
வானம்பாடி போல வந்து
மகிழ்ச்சி தானே தருகுது  - ( சியாமளவாணி பண்பலை )

புத்தம் புதுக் கருத்துக்களை
நித்தம் நித்தம் சொல்லுது.
சத்தம் இன்றி சாதனையாய்
மக்கள் மனங்களை வெல்லுது.

கிராம மக்கள் உயர்ந்திடவே
தொடங்கப் பட்ட வானொலி
உலகம் முழுதும்  இணையத்தில்
விழுகுதையா கரவொலி  - ( சியாமளவாணிக்கு கரவொலி )

சிறுவர் முதல் பெரியோருக்கும்
செய்திகளைக் கூறுது.
காலை முதல்  மாலை வரை
காதுக்கு இனிமைதானே கூடுது.

சிந்தனையைத் தூண்டுதையா
சியாமளவாணி பண்பலை
சிகரம் தொடும் அனைவரையும்
சிலிர்க்கச் செய்யும் அன்பலை.

கோவில் வாசல் தொடங்கி
சிந்தனைச் சிறகாய்ப் பறந்து
கணிமம் கற்கத் தூண்டி
கவலைகளை மறக்கச் செய்யும்
பண்பலை
-( சியாமளவாணி பண்பலை )
பாடலாக்கம்

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments