கவிதை - பாக்யா வார இதழுக்கு. ( 23 - 4- 15 )
வராரு அழகரு
அழகர் கோவிலிலிருந்து
ஒவ்வொரு மண்டகப்படியாய்
அருள்பாலித்து வந்த அழகரை
சித்திரை மாதத்தின்
கத்தரி வெயிலிலிருந்து குளிர்விக்க
தண்ணீர் பீய்ச்சி அடித்து வரும்
பக்தர்களின் பலத்த கோஷங்கள்
விண்ணதிர ,
தங்கக் குதிரையில்
பச்சைப் பட்டுடுத்தி,
வறண்ட வைகையில்
குளத்து நீரென இருந்த நீரில்
இறங்கினார்
இந்த ஆண்டாவது விவசாயம்
பிழைக்குமா என்ற ஐயத்துடன் !
மு.மகேந்திர பாபு ,
0 Comments