காந்தித் தாத்தா ( அக். 2 - காந்தி ஜெயந்தி )

 

காந்தித் தாத்தா  ( அக். 2 - காந்தி ஜெயந்தி )

அகிம்சை கொள்கை கொண்டவராம்
அகிலம் போற்ற வாழ்ந்தவராம்
பொய்யே பேசா வாழ்க்கைதனை
அரிச்சந்திர நாடகத்தால் கற்றவராம்.

அடிமையில் இருந்த தேசத்தை
அன்பு நெறியில் மீட்டவராம்
துப்பாக்கி பீரங்கி ஆயுதங்களை
கைத்தடி கொண்டு வென்றவராம்.

உழைக்கும் வர்க்கத்தின் அரையாடை
உடுத்த வைத்தது கதராடை
மதுரை மண்தான் மகாத்மாவின்
மனதை மாற்றிய மாநகராம்.

ஓங்கி மிதித்த வெள்ளையனும்
உள்ளம் நெகிழ்ந்து திருந்தவே
காலணி ஒன்றைத் தன்கையாலே
சிறைக் காவலனுக்குத் தந்தாராம்.

குழந்தைகள் மகிழ்ந்து அன்பாலே
தாத்தா என்று அழைக்கவே
உலகம் என்றும் தழைக்கவே
உயர்வோம் நாமும் பண்பாலே !

பாடலாக்கம்
மு.மகேந்திர பாபு ஆசிரியர்,

Post a Comment

0 Comments