தூண்டில்
ஆயிரம் தார்க்குச்சிகளை நெஞ்சில் ஒரே நேரத்தில் குத்துவதைப் போல இருந்தது அவனது அந்த ஒத்தக் கேள்வி.
அண்ணே ... நீங்க இந்த ஊரா ?
சொந்த ஊரிலிருந்து எவ்வளவு அந்நியப்பட்டுப் போய்விட்டோம் என நெனக்கும் போது பெருந்துயராப் போச்சு. ஒரு வனவாச காலமாகிவிட்டது ஊரிலிருந்து பெயர்ந்து வந்து.நல்லதுக்கும் பொல்லதுக்கும் போயி , போனசோடுல திரும்பியார வேண்டிய சூழலில் நான்.
ஆமாடா ... நீ யாரு மகன் ?
நான் முத்துராமு மகன்.
அப்படியா ? அப்ப நீ எனக்கு மருமகன். சரி.மீனு சிக்குச்சா ?
விராலு மீனு மட்டுந்தான் மாட்டுச்சா.இதோ சின்ன குழி தோண்டி , தண்ணி ஊத்தி நீந்த விட்ருக்கேன்.
எத்தன பேரு ?
நாங்க நாலு பேரு . எல்லாமே கொண்டாந்துட்டோம். வடசட்டி , வெங்காயம் , மசால்பொடி எல்லாமே இருக்கு. எண்ணெ மட்டுந்தான் வாங்கணும். அம்பது.எண்ணெ எட்ரூவா
எங்ககிட்ட ஏழ்ரூவா தான் இருக்கு.
அப்டியா. எண்ணெச் செலவு என்னோடது என கொடுக்க , வாங்க யோசித்தவன் சட்டபையில்.திணிச்சுட்டு வந்தேன்.
இருபது இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி நான் ஏஞ்சேக்காலிகளோடு செஞ்சத , இந்தத் தலமொறயும் செய்துங்கற பால்ய நெனவுகளோடு வீடு திரும்பினேன்.
மு.மகேந்திர பாபு.
0 Comments