கிராமிய விளையாட்டுகள்

 

வச்சே டப்பான்

வாரே சுண்டு

வச்சிக் கோடி

வாரிக் கோடி


பால்யத்தில் சிறுமிகள் கிராமங்களில்  தட்டாங்கல்  (கூழாங்கற்கள் ) கொண்டு விளையாடும் போது சொன்ன சிறு பாடல் வரிகள்.


 இடது கைக்குள் நாலு கல்லும் , வலது கையால் ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு பிடித்து , வாரிக்கோடி என்று சொல்லும் போது ஐந்து கல்லும் வலது கையால் அள்ளப் பட்டிருக்க வேண்டும். பொருளே தெரியாமல் மகிழ்ச்சியாக விளையாடிய காலமது.


இன்றுள்ள பிள்ளைகளுக்கு அப்படி ஒரு விளையாட்டு இருந்ததா , இருக்கிறதா என்று கூட தெரியுமோ ? தெரியாதோ ?!


காலம் பால்ய விளையாட்டுக்களை மறக்கடிக்கச் செய்து வருகிறது.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments