பூந்தோட்டம் [ இசைப் பாடல் )
வண்ண வண்ணப் பூக்களால்
எண்ண மெல்லாம் துள்ளுதே !
சின்னச் சின்னக் குழந்தைகள்
சிரித்து மகிழ்ந்து பார்க்குதே !
மொட்டு விடும் ஒருசெடி
தொட்டு வுண்ணும் தேனீக்கள்
விட்டுப் போக மனமில்லை
வீடாய் மாறட்டும் பூந்தோட்டம் !
காலை மாலை வேளையில்
தண்ணீர் ஊற்றும் போதிலே
செடி குளிப்பது அற்புதம்
மனம் குளிர்வது நிச்சயம் !
ஊட்டி மலர்க் கண்காட்சி
கூட்டிப் போகும் போதிலே
உள்ள மெல்லாம் பறக்குதே
நம்முள் புத்துணர்வு பிறக்குதே !
செடி வளர்த்திட விரும்பினோம்
மரம் வளர்த்திட விரும்பினோம்
சுற்றுச் சூழல் சிறந்திட
புது எண்ணத்தோட திரும்பினோம் !
0 Comments