காத்தோடு கைவீசி

 



காத்தோடு கை வீசி

நட்போடு கதை பேசி 

நடப்பதே தினமும் சுகந்தான்.

இப்பப் பூத்த பூவென

மலரும் எங்க முகந்தான்.


சைக்கிளயும் தேடல

பஸ்ஸயும் மனம் நாடல.

செருப்பில்லா காலுதான் .

ஆனாலும் நாங்க

செருக்கா நடக்கும் ஆளுதான்.


அடையாள அட்டை 

ஆடிக்கொண்டே தொங்கும்.

ஆண்டு பல கடக்கும் போது 

எங்க ஊருக்கு அடையாளம் நாங்கதானு

எங்க மனசு பொங்கும்.


காட்டுவழி கடந்தாலும் 

ரோட்டு வழி நடந்தாலும் 

வெயில் , மழ வந்தாலும் 

விரக்தியுமில்ல , வேதனையுமில்ல

நாங்க நடப்பதற்கு இவை சோதனையுமில்லை.


எங்கூர்ல எந்த 

இரைச்சலுமில்லை.

ஏழை , பணக்காரனு 

மன உளைச்சலுமில்லை.


பள்ளிக்கூடம் வரப்போகுது

பண்ப நல்லா தரப்போகுது.

பாத்துக்கிட்டே இருங்க...

பட்டணத்த ஆள 

நாள எங்க பயணம் வரும்ங்க.


மு.மகேந்திர பாபு.


புகைப்படம்  - திரு.குணா அமுதன் சார் Guna Amuthan அவர்கள். நன்றிகள் சார்.

Post a Comment

0 Comments