அவனும், அவளும்

 


அவனும், அவளும்
@ படிக்கும் போதே
அவன் அவளைப் படித்ததால்
படிப்பு அவனிடமிருந்து
விடை பெற்றது .
@ அவளும்
அவனைப் பார்த்தாள்
ஆனாலும் அவள் படிப்புத் தொடர்ந்தது .
@ மேல் படிப்பு படிக்கச் சென்றாள்.
எப்போதும்
பார்த்துக் கொண்டே இருந்தவன்
இப்போது ,
எப்போதாவது பார்க்க மாட்டனா ?
என ஏங்கினான் .
@ பேருந்து நிலையம் அவனுக்கு
இரண்டாவது வீடாகியது.
அவள் விழிகளைப்
பார்த்துப் பார்த்துப் பேசினான் .
அவள் இமை
அனிச்சையாய் பேசும்போது ,
தனக்குள் பெருமை கொண்டான் .
@ காலங்கள் கடந்தன ....
அவள் மணக் கோலத்திற்கு
ஆயத்தமானாள்.
இவன் மனம் அலங்கோலமாகியது .
@ என் விழிகளின் பேச்சுக்கு
விழிகளால் பதில் சொன்னாயே !
உனக்குத் திருமணமா ? என்றான்.
@ அப்போதும்
விழிகளாலே சொன்னாள்
ஆமென்று !
@ அப்படியானால் .....
நம் காதல் ....?
'நட்பு' என்றாள் .
'தப்பு' என்றான் .
@ அமிலம் தொட மாட்டேன் என
மனதிற்குள் எண்ணிக் கொண்டான் .
@ அவனும் ,அவளுமாகவே இருந்தார்கள் .
அவர்களாகவில்லை
அவர்கள்.
மு.மகேந்திர பாபு .

Post a Comment

0 Comments